மைசூர் தடா கைதிகள் விடுதலை: தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சந்தனக் கடத்தல் வீரப்பன் தொடர்பான 51 தடா கைதிகள் விடுதலை வழக்கில் தீர்ப்பைஉச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட சிலரை சந்தனக் கடத்தல் வீரப்பன் ஜூலை 30-ம்தேதி இரவு கடத்திச் சென்றான்.

ராஜ்குமாரை மீட்க கர்நாடக, தமிழக அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டன.ஆனால், இதுவரை ராஜ்குமார் விடுவிக்கப்படவில்லை. அரசுத் தூதராக வீரப்பனைநக்கீரன் கோபால் சந்தித்தார். அப்போது ராஜ்குமாரை விடுவிக்க சில கோரிக்கைகளைவீரப்பன் தெரிவித்தான்.

கர்நாடக சிறைகளில் உள்ள 12 பெண்கள் உள்பட 51 தடா கைதிகளையும்விடுவிக்கவேண்டும். தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5தமிழ்த்தீவிரவாதிகளையும் விடுவிக்கவேண்டும் என்பது வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்று.

இக் கோரிக்கையை தமிழக, கர்நாடக அரசுகள் ஏற்றுக் கொண்டு தடா கைதிகள் மற்றும்தமிழ்த் தீவிரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டன. இந்நிலையில், வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையைச்சேர்ந்த ஷக்கீல் அகமது என்பவர் வீரப்பன் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த ஷக்கீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம், தடா கைதிகள் விடுதலைசெய்யப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ் வழக்கைஉச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

இவ் வழக்கை நீதிபதி பரூச்சா தலைமையில் நீதிபதிகள் மொகாபாத்ரா, சப்பர்வால்ஆகிய 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இவ் வழக்கில் தமிழக, கர்நாடகஅரசுகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந் நிலையில், இவ் வழக்கை மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+