மேற்கு வங்க வெள்ள சாவு 1000 ஆனது
கல்கத்தா:
மேற்கு வங்கத்தில் வெள்ளத்திற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆகஉயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் இறந்தவர்களில் 765 பேருடைய உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.232 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.
வெள்ளம் பாதித்த 9 மாவட்டங்களிலும் உள்ள முக்கிய, பெரிய ஆறுகளில் நீர்ப்போக்கு அபாய கட்டத்தில் இல்லை. நீர் வரத்தும் குறைந்து விட்டது.
மீட்புப் பணி அதி வேகத்தில் நடந்து வருகிறது. ராணுவத்தினர் மீட்புக் குழுவினருக்குஉ;தவி வருகின்றனர். வெளத்தால் 1.8 கோடி பேர் வரை வீடுகளை இழந்துபாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.
பத்கா, 24 பர்கானா மாவட்டம், போனோகோன், கய்கட்டா, ஸ்வரநகர் மற்றும் பிறமாவட்டங்களில் ஆறுகளில் இன்னும் அதிக அளவில் நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.வங்கதேசத்திலிருந்து இந்த நீர் வந்து சேருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில்இன்னும் வெள்ள அபாயம் இருந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications