இளங்கோவன் - காளிமுத்து "சண்டை மீண்டும் துவங்கியது!
சென்னை:
அதிமுக அவைத்தலைவர் காளிமுத்து மீண்டும் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதுதாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காளிமுத்து கூறியுள்ளதாவது:
வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாமிகச் சரியாகச் செயல்படுகிறார் என்று ஜெயலலிதா கூறியதாக இளங்கோவன் கூறியுள்ளார்.
எங்கள் தலைவி ஜெயலலிதா அப்படி எதுவும் கூறவில்லை. இம்மாதிரி அறிக்கை வெளியிடுவதை இளங்கோவன்தவிர்த்திருக்க வேண்டும்.
வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக, தமிழக முதல்வர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றுதான் ஜெயலலிதா கூறிவருகிறார். மேலும் ஒரு முறை வீரப்பன் விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி எதுவும் நடக்காதது போல்,அலட்சியமாக நடந்து கொள்கிறார். ஆனால் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவோ அதிர்ச்சி அடைந்தநிலையில் இருக்கிறார்.
வீரப்பன் விவகாரம் ஒரு பிரச்சனை என்றே கருதாமல் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்கிறார் கருணாநிதி.இதிலிருந்தே இந்தக் கடத்தல் நாடகம் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதே என்றுதான் ஜெயலலிதா கூறினார்.
ஆனால், இளங்கோவனோ எதிர்மறையாக அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். பேச்சு சுதந்திரம் இருக்கிறதுஎன்பதற்காக அவர் தாறுமாறாக அறிக்கை வெளியிடக் கூடாது என்று காளிமுத்து எச்சரித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications