45 ஆண்டுகளில் சீனாவை மிஞ்சும் இந்தியா
டெல்லி:
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இன்னும் 45 ஆண்டுகளில்இந்தியா உருவாகும் என்று மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த்கூறியுள்ளார்.
தேசிய மக்கள் தொகை கமிஷனின் தலைவராகவும் இருக்கும் பந்த், தேசிய மக்கள்தொகைத் திட்டம்-2000 என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியதாவது:
தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அப்படியே தொடர்ந்தால்,2045-ம்ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும்.
மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மே 11-ம் தேதியுடன் இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியைத்தொட்டது.
மக்கள் தொகை வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்று கூற முடியாது. தடுக்கப்படக்கூடியதுதான் இது.
சிசுவதை, பெண்களின் நிலைமை, பால் வேறுபாடு ஆகியவையும் கூட மக்கள் தொகைவளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்மட்டும் இந்தியாவின் 45 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இது 2016-ம் ஆண்டின்இறுதியில் 55 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மக்கள் தொகை 1.7 கோடி அதிகரிக்கிறது. 30கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிக்கிறார்கள். இது மன்னிக்கவேமுடியாததாகும். வறுமையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications