கிரிக்கெட் சூதாட்ட வீரர்கள் மேல் விரைவில் நடவடிக்கை
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் மாதம் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட்வாரியம் அறிவித்துள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய அசாரூதின், ஜடேஜா, அஜய் சர்மா, பிரபாகர், மோங்கியா ஆகிய 5 வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம்இடைக்கால தடை விதித்துள்ளது.
இருப்பினும் இவர்கள் கிரிக்கெட் விளையாட ஆயுட்காலத் தடை விதிப்பது மற்றும் அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்றவை குறித்து கிரிக்கெட்வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை.
சிபிஐ அறிக்கையை சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் மாதவன் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தவுடன், அதனடிப்படையில் கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுஅல்லது விசேஷ பொதுக்குழு பரிசீலனை செய்யும்.
பொதுக்குழு பரிசீலனைக்குப்பின் சூதாட்டத்தில் தொடர்புடைய வீரர்கள் மேல் நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!