மாணவியை கற்பழிக்க முயற்சி: ஆசிரியர்கள் நீக்கம்
சென்னை:
பிளஸ் 2 மாணவியை கற்பழிக்க முயற்சித்த 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அருகே கீழ்பென்னாத்தூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1800 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ் டூ மாணவிகள் மட்டும் 300 பேர் உள்ளனர்.
சம்பவத்தன்று பள்ளிக்கூடத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் தாவரவியல் வகுப்பு நடந்தது. வகுப்பு முடிந்ததும்கடைசியாக வகுப்பில் இருந்து வெளியேறச் சென்ற ஒரு மாணவியை, அங்கு வந்த கணித ஆசிரியர் ஜெயச்சந்திரன்தடுத்து நிறுத்தினார். கொஞ்ச நேரம் கழித்துப் போ என்று கூறினார்.
அதற்கு அந்த மாணவி அடுத்த பீரியட் தொடங்கி விடும் என்று கூறியிருக்கிறார். நான் தானே அடுத்த பீரியட்பாடம் எடுக்க வேண்டும் என்றார். அப்போது அங்கு தாவரவியல் ஆசிரியர் தேவதாஸ் என்பவர் வந்தார்.
இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைக் கேட்ட அவரும், அம்மாணவியை சொன்னபடி செய் என்றார்.அதைக் கேட்ட மாணவி உள்ளே போய் உட்கார்ந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஆசிரியர் ஜெயச்சந்திரன்அம்மாணவியிடம் தகாத முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார்.
பயந்து போன மாணவி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அப்போது மற்றொரு ஆசிரியர்தேவதாஸ் தடுத்து நிறுத்தியுள்ளார்.
உடனடியாகப் பள்ளியை விட்டு வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி பெற்றோரிடம் விஷயத்தை சொன்னார். கிராமமக்கள் கொதித்தெழுந்தனர். அனைத்துக் கட்சியும் ஆதரவு தெரிவிக்க கூட்டமாக பள்ளி முன்பு கூடினர். மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.
தகவல் தெரிந்து போலீஸ் அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் விரைந்து வந்தனர். உடனடியாக மாணவியிடம்தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications