மழை வேண்டி கழுதைக்குத் திருமணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிரிக்கெட் சூதாட்டம் பற்றி, தவணை முறையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக, அரசிடம் சி.பி.ஐ. சமர்ப்பித்துள்ள அறிக்கையில்அசாருதீன், ஜடேஜா, அஜய் சர்மா, மோங்கியா, மனோஜ் பிரபாகர் - ஆகிய ஆட்டக்காரர்கள், சூதாட்ட முதலாளிகளுக்கு உதவியவர்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

ஸ்டீவார்ட், லாரா, மார்க் வா - போன்ற அயல்நாட்டு ஆட்டக் கார்களும், இந்த சூதாட்ட மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ. அறிக்கைகூறுகிறது.

இந்த தலையங்கம் எழுதப்படுவதற்கு முன்பு கடைசியாக வந்த தகவல் தவணையின்படி - அசாருதீனுக்கு, சில தீவிரவாதிகளுடனும் தொடர்பு இருந்திருக்கிறது.(தீவிரவாத செயல்களில் அல்ல - தீவிரவாதிகளின் கிரிக்கெட் சூதாட்டத்தில்).

முக்கியமாக அசாருதீன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான், ஜடேஜா, மோங்கியா, அஜய் சர்மா, மனோஜ் பிரபாகர் ஆகியோர் பற்றிசி.பி.ஐ. குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறது என்றும் தெரிய வருகிறது ; சூதாட்ட முதலாளிகள் (புக்கிகள்) பல தகவல்களைக் கூறியிருந்தாலும், மற்றஆட்டக்காரர்கள் மாட்டுவதற்கு அசாருதீனின் வாக்குமூலம்தான் பெரிதும் வழி செய்திருப்பதாகத் தோன்றுகிறது.

போலீசிடம் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்பதால், வழக்கு என்று வரும்போது,அசாருதீன் அதை மறுத்துவிடக் கூடும். மிரட்டிவாக்குமூலம் வாங்கி விட்டார்கள் என்று கூறுவது வெகு சுலபம்.

இது ஒருபுறமிருக்க, மற்றவர்களைப் பற்றி அவர் கூறியிருப்பது எந்த அளவு உண்மை என்பது இனிதான் தெரிய வேண்டும். சட்டப்படி பார்த்தாலோ, வருமானவரி ஏய்ப்பு, அந்நியச் செலாவணி மோசடி என்று வழக்குகள் பதிவாகி நடப்பது வேண்டுமானாலும் எளிதாக இயலலாம் ; மற்றபடி சட்டப்ப பூர்வமாகஇவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுப்பது என்பது, சிக்கலான விஷயம்தான்.

கிரிக்கெட் மைதானத்தில் பெறுகிற வெற்றி - தேசத்திற்கு ஒரு பெருமை எனவும், அங்கே பெறுகிற தோல்வி - நாட்டிற்கே ஒரு தலைகுனிவுஎன்பது போலவும் நினைத்துக் கொண்டு கோடானு கோடி கிரிக்கெட் ரசிகர்கள் , ஒவ்வொரு ஆட்டத்தையும் வாழ்வா, சாவா பிரச்னை போல கவனித்துவருகிற போது - சில கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், கிரிக்கெட் மைதானத்தை, சூதாட்ட களமாகப் பயன் படுத்தியிருக்கிறார்கள் என்பது,ரொம்பவும் வருந்தத்தக்க விஷயம். யார் யார் தவறு செய்தவர்கள் என்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், தவறு நடந்திருக்கிறது என்பதுநன்றாகவே தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற