நாளை அகில இந்திய காங். தலைவர் தேர்தல்
டெல்லி:
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 800 பேர் டெல்லியில் நடக்கும் தேர்தலில் கலந்து கொள்வார்கள். இவர்கள்காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்வார்கள்.
நவம்பர் 12 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறஇருக்கிறது.
தலைவர் பதவிக்கு சோனியா காந்தியும், உத்தரப்பிரதேச முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிதேந்திரபிரசாத்தும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தை எதிர்த்து, இன்னொருவர்போட்டியிடுவது இதுவே முதல்முறை.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிலிருந்து வாபஸ் பெற மாட்டேன் என்று ஜிதேந்திரப்பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியை எதிர்த்துப், போட்டியிடும் ஜிதேந்திரப்பிரசாத் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.
காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனதுநோக்கமாகும். சோனியா காந்தியை எதிர்க்க வேண்டும் என்பது எனது எண்ணமல்ல.
மக்களிடையே பாரதிய ஜனதாக் கட்சி வலுவிழந்த நிலையில் உள்ளதால், காங்கிரஸ் தனது நிலையைப் பலப்படுத்திஆட்சியைப் பிடித்து விடலாம்.
காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும். இதனால்தான் தலைவர் போட்டியில் மனுத் தாக்கல்செய்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எல்லாரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் கட்சியைப் புதுப்பிக்க வேண்டுகிறார்கள். அந்தரீதியில்தான் நான் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறேன்.
ஆரம்பத்திலிருந்தே நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். கட்சியிலிருந்து போய்விட்டு மீண்டும் கட்சியில்சேர்ந்தவன் அல்ல. கட்சியில் கடுமையான மாற்றம் தேவைப்படுகிறது. அதனால் அகில இந்தியத் தலைவர்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் ஜிதேந்திர பிரசாத்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications