பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தேசிய விருது
ஈரோடு;
ஈரோட்டில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சேது ராமலிங்கத்திற்குவிஸ்வேஸ்வரய்யா தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச் சூழல் சமூக சேவை ஆகியவற்றில் சிறந்த சேவையாற்றியசேதுராமலிங்கத்திற்கு மைசூரில் உள்ள தேசிய மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, இவ்விருதினைவழங்குகிறது.
சேதுராமலிங்கம், பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதால் ஏற்படும் விளைவுகளைஆராய்ந்து இந்த விளைவுகளை மாற்றி அமைக்க முயன்றார்.
மேலும், பூச்சிகளுக்கு மருந்து தெளிப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பையும் தவிர்க்கநினைத்தார். எனவே, பூச்சி எதிர்ப்பு மற்றும் நோய் தாக்காத நிலக்கடலை, நெல், எள் ஆகியபயிர்களை உருவாக்கினார்.
இவரது இந்த சேவையைப் பாராட்டி சுற்றுச் சூழல் மாசுபடுதலுக்கு எதிராக சிறந்த சேவைசெய்தமைக்காக விஸ்வேரய்யா விருது இவருக்கு வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் தார்வார்டு பல்கலைக் கழகத்தில் வரும் 24-ம் தேதி நடக்கும் சுற்றுச் சூழல்மாசடைதல் மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாகம் பற்றியக் கருத்தரங்கின்போது விருதுவழங்கப்படும்.
தேசிய மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச் சூழல் துறை, தார்வாட் வேளாண்மைப் பல்கலைக்கழகம், பெல்காம் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஆகியவைஇணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது.












Click it and Unblock the Notifications