For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குதுப்மினார் முன்பு பூஜை செய்ய முயன்ற வி.எச்.பி. தொண்டர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

உலகப் புகழ் பெற்ற டெல்லி குதுப்மினார் முன்பு இந்து மத சடங்குகளைச் செய்யமுயன்ற விஸ்வ இந்து பரிஷத்தைச் (வி.எச்.பி) சேர்ந்த 70 தொண்டர்கள் போலீசாரால்செவ்வாய் கிழமையன்று டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி டெல்லி போலீஸ் துணை கமிஷனர் காமராஜ் கூறுகையில், பழமையான இந்துமற்றும் ஜெயின் கோயில்கள் அமைந்துள்ள குவாட் - அல் - இஸ்லாமில் வி.எச்.பி.மற்றும் பஜரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மத சடங்குகளை செய்ய முயன்றனர்.இது தொடர்பாக 78 பேரை கைது செய்து பின் விடுதலை செய்தோம்.

இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறையினர் அநத இடத்தில் யாரும் எந்த விதமானமத சடங்குகளையும் செய்வதற்கு அனுமதி கிடையாது என உத்தரவுபிறப்பித்துள்ளனர். இதை மீறியதால்தான், வி.எச்.பி. தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வி.எச்.பி. தொண்டர்களை தடுக்கும் விதத்தில் அங்கு வேலிகள்அமைக்கப்பட்டிருந்தன. அதை மீறி வி.எச்.பி. தொண்டர்கள் செல்ல முடியாதபடி,போலீஸார் தடிகளுடன் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்தப் பகுதியில் காலை முதலே போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. சட்டஒழுங்கைக் காக்க அங்கு 120 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர் என்றார் அவர்.

இதுகுறித்து வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 150 வி.எச்.பி.தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும். அவர்களில் 75 பேர் துறவிகள் எனவும்கூறினார்.

250 அடி குதூப்மினார் தான் உலகிலேயே மிக உயர்ந்த தனி கோபுரமாகும். இது 800ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கன் இளவரசர் குத்புதீன் ஐபக் என்பவரால்கடட்டப்பட்டது.

இந்த கோபுரத்தில், சிவன், பார்வதி, விநாயகர் உட்பட பல இந்து கடவுள்களின்படங்கள் குதுப்மினாரின் சுவர்களில் வரையப்பட்டுள்ளது. அங்கு இந்துக்கோயில்களில் பூஜை நேரத்தில் உபயோகப்படுத்துவது போன்ற ஆலய மணிகளும்உள்ளன. அங்கு இப்போது முஸ்லிம்கள் தொழுகைகள் நடத்தி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X