80 தொகுதிகளில் வெற்றி பெறுமாம் புதிய நீதிக் கட்சி
ஆரணி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி தனித்துப் போட்டியிட்டாலே 80 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய நீதிக் கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
ஆரணி தொகுதியில் 35 இடங்களில் புதிய நீதிக்கட்சி கொடியேற்று விழா நடந்தது. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கொடியேற்றி வைத்துப்பேசியதாவது:
விலை வாசி உயர்வு காரணமாக திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டிற்குள் 3 முறை டீசல்,பெட்ரோல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலையை ஏற்றியுள்ளது.
அத்தியாவசிய விலை உயர்வைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசு மற்ற மாநிலத்தை விட இங்கு விலை உயர்வு குறைவுதான் என்று கூறி வருகிறது.
இதுவரை சென்னையில் திமுக வும், அதிமுக வும் நடத்திய மாநாடுகளால் 4 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே வந்து இருக்கும். ஆனால் புதிய நீதிக்கட்சிநடத்திய மாநாட்டில் 20 ஆயிரம் வாகனங்கள் அணி வகுக்கப்பட்டன.
அதைப் பொறுக்காத திமுக மற்றும் அதிமுக வினர் இரவில் தூங்குவதேயில்லை. டாக்டர் ராமதாசுடன் கூட்டணி இருக்குமா என்று கலைஞர் நினைத்துக்கொண்டிருக்கிறார்.
அதே நேரம் ஜெயலலிதா கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார். இப்போது புதிய நீதிக்கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 80 இடங்களுக்கு மேல்வெற்றி பெறலாம். எங்களுக்கு மூப்பனாரோ, காங்கிரசோ கூட்டணி தேவையில்லை. தென் மாவட்டங்களில் புதிய நீதிக் கட்சியின் எழுச்சி அதிகமாகஉள்ளது.
தமிழகத்தில் திமுக வும், அதிமுக வும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவே புதிய நீதிக் கட்சியை ஆதரித்து வாக்களித்துவெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் சண்முகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications