For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன்: சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கோரியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராஜ்குமார் கடத்தல் மற்றும் விடுதலை குறித்த விவரங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நான் கூறியதை கருணாநிதி கண்டுகொள்ளவேயில்லை. இதிலிருந்தே நாட்டை 3 மாத காலமாக ஆட்டிப் படைத்த ஒரு பிரச்சனைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கருணாநிதிகொடுக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது.

ராஜ்குமார் கடத்தப்பட்ட அடுத்த நாள், ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்றும், ரூ 5 கோடி பணம் கேட்டிருந்தார் என்றும் சில பத்திரிக்கைகளில் செய்திபிரசுரமாகியிருந்தது. ராஜ்குமார் விடுதலை செய்யப்படும் வரை பல பத்திரிக்கைகள் மற்றும் வாரப் பத்திரிக்கைகளில் ரூ 5 கோடி முதல் ரூ 50 கோடி வரைஅரசுத் தூதர் நக்கீரன் கோபால் மூலம் வீரப்பனுக்குப் பணம் அனுப்பப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.

வார இதழ் ஒன்றில், வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உண்மை என்றும், கொடுத்தனுப்பப்பட்ட பணத்தில் பாதி தொகை அரசு உயர் பதவியில்உள்ளவர்கள் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் செய்தி பிரசுரமாகியிருந்தது.

ராஜ்குமார் கடத்தல் விவகாரம் குறித்த அனைத்து விவரங்களும் பத்திரிக்கையில் வெளியாகி விட்டதாக கருணாநிதி கூறுகிறார். அப்படியானால்பத்திரிக்கைகளில் வெளி வந்த செய்திகள் எல்லாம் உண்மை என்று அவர் ஒப்புக் கொள்கிறாரா? வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை என்றுஅவர் ஏன் பொய் கூறுகிறார்?

ராஜ்குமார் விடு விக்கப்பட்டவுடன் முதன் முதலாக அவர் ராமராஜன் என்பவரது வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இது குறித்து ராமராஜன்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ராஜ்குமார் தனது வீட்டிற்கு 12 ம் தேதியே அழைத்து வரப்பட்டார். மாநில அரசு கூறியுள்ளதைப் போல 15 ம் தேதிஅழைத்து வரப்படவில்லை . ராஜ்குமார், தமிழக முதல்வர் கருணாநிதியுடன் மூன்று முறை பேசியுள்ளார். கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் 13 முறை பேசினார்.

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசுடன் 30 நிமிடங்கள் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார். பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள்அனைத்தும் உண்மை என்றால், இந்தச் செய்தியும் உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா?

நவம்பர் 12 ம் தேதியே ராஜ்குமார் விடு விக்கப்பட்டு விட்டார் என்றால் நவம்பர் 19 ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் இதுகுறித்து கருணாநிதி ஏன்விளக்க மளிக்கவில்லை? இந்த விஷயங்கள் குறித்து கருணாநிதி விளக்கம் அளிக்கத் தயங்குகிறார். அதனால் தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்என்ற எனது கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

எதிர்காலத்தில், நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையும் பாதிக்கக் கூடிய அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையில் வெளிப்படையாகமுழுமையான உண்மைகளைப் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் இதற்குக் கருணாநிதி மறுப்புத் தெரிவிப்பதிலிருந்தே, அவரே இதில் நடந்துள்ள தில்லுமுல்லுகளில் கழுத்து வரை மூழ்கி இருக்கிறார். அவரே இதில்சம்பந்தப் பட்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

ஏற்கனவே கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது, இ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவைக் கொலை செய்த குற்றவாளிகளை நாட்டை விட்டுத் தப்பி ஓடஅனுமதித்தார்.

அதன் பின்னர் விரைவிலேயே பத்மநாபாவைக் கொன்ற கொலையாளிகளை மீண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக்தமிழக மண்ணில் படுகொலை செய்ய வைத்தார்கள்.

அதைப்போலவே, இப்போது ராஜ்குமார் கடத்தல் நாடகத்திற்குப் பின்னால் உள்ள உண்மைகளையெல்லாம் கருணாநிதி மூடி மறைக்கிறார்.

இப்போதாவது, மத்திய அரசு, கருணாநிதியால் உருவாக்கப்பட்டுள்ள அவல நிலைமையைப் புரிந்து கொண்டு இந்தக் கட்டத்திலாவது தலையிட வேண்டும்.ராஜ்குமார் கடத்தல்-விடுதலை ஆகிய முழு சம்பவத்தையும் ஆராய உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தங்கு தடையின்றி, பாரபட்சமின்றி இந்த சிபிஐ விசாரணை நடை பெறுவதற்கும், வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நாடகத்தைப்பற்றி முழுமையான உண்மைகளைப் பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், கருணாநிதியின் தேச விரோத நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இந்திய நாட்டின்இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறு நேராமல் தடுப்பதற்கும், மத்திய அரசு உடனடியாகக் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அப்போதுதான் சிபிஐ விசாரணை முறையாக எந்தத் தடையுமின்றி நடைபெற முடியும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X