இந்தியாவுக்கு போர்க் கப்பல்களை கட்டும் ரஷ்யா
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா):
இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் போர்க் கப்பல்கள் கட்டும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
இந்தியாவுக்காக 3 கிரிவேக் ரக போர்க் கப்பல்களை ரஷ்யா கட்ட உள்ளது. இதில் ரஷ்ய கிளப் ரக ஏவுகணைகள் பொறுத்தப்படும்.இந்த ஏவுகணைகள் தரை மற்றும் கடலில் உள்ள எதிரி நாட்டு இலக்குகளை 300 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன்கொண்டவை.
இவை தவிர விமான எதிர்ப்பு, நீர்மூழ்கிகளைத் தாக்கும் ஏவுகணைகள், கப்பல்களைத் தாக்கும் ராக்கெட்களும் இதில்பொறுத்தப்படும்.
முதலில் கட்டப்படவுள்ள கப்பலின் அடிப் பகுதியான ஹல் வெள்ளிக்கிழமை நீரில் விடப்பட்டது. இதன் மீது தான் கப்பலின் பிறபகுதிகள் கட்டப்படும். சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க இந்த ஹல்கள் நீரில் விடப்பட்டன. ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் சதீந்தர்குமார் லம்பாவின் மனைவி நீலிமா லம்பா கப்பலின் ஹல் மீது தேங்காயை உடைத்தார்.
ரஷ்யாவின் பால்டிக் கடற்படைப் பிரிவின் மூத்த அட்மிரல்கள், மாகாண கவர்னர் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்தக் கப்பலில் 200 வீரர்கள் தங்கியிருக்க முடியும். ஹெலிகாப்டர்கள் வந்திறங்கும் தளமும் இருக்கும். 3 போர்க் கப்பல்களைக்கட்ட ரஷ்யாவுக்கு இந்தியா 1 பில்லியன் டாலர் வழங்கும். இந்தியாவின் கடற்படையில் 70 சதவீத கப்பல்களும் ஆயுதங்களும்ரஷ்யாவில் தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ரஷ்யாவிடமிருந்து விமானம் தாங்கிக் கப்பலா அட்மிர்ல கோர்ஷ்காவையும் இந்தியா வாங்கத் திட்டமிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications