வீரப்பனுக்கு உதவிய அரசியல்வாதிகள் யார்? த.மா.க கேள்வி
சென்னை:
ராஜ்குமார் கடத்தப்பட்ட பிரச்சனை தொடர்பாக நீதி விசாரணையோ அல்லது சி.பி.ஐ. விசாரணையோ நடத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்கோரியுள்ளது.
த.மா.கா. சட்டசபைத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றங்கள் புரிய வீரப்பனுக்கு உதவிய அரசியல்வாதிகள், அதிகாரிகளின்பெயர்கள் தனக்குத் தெரியும் என தூதுவராகச் சென்ற பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இந்தப் பெயர்களை நெடுமாறன் வெளியிட வேண்டும். இது நெடுமாறன் கடமையாகும்.
மைசூர் சிறையில் உள்ள தடா கைதிகளை விடுவிக்க தமிழகத்தில் உள்ள எந்த எதிர்க் கட்சியும் குரல் கொடுக்கவில்லை என்று நெடுமாறன் கூறியுள்ளார்.இவர்களை விடுவிக்கக் கோரி கர்நாடக அரசுக்கு தமிழக முதல்வர் பல முறை கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக முதல்வராக இருந்த ஜே.எச். படேலை நானே நேரில் சந்தித்து தடா கைதிகளை விடுவிக்கக் கோரினேன் என்று சோ.பா. கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
