ஆத்தா, நான் ஜெயிச்சுட்டேன் !
வாஷிங்டன்:
புளோரிடாவில் ஜார்ஜ் புஷ்சுக்கு கிடைத்த வெற்றி செல்லாது எனக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ள அல்கோர் தனதுசெயல் நியாயமமானது தான் எனக் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் காப்பாற்றுவதற்காகத் தான் இந்த முடிவு எடுத்தேன். இது தனிப்பட்டமோதல் அல்ல. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முயற்சி. ஆயிரணக்கணக்கான புளோரிடா வாக்குகளைஎண்ணாமல் விட்டிருக்கிறோம். வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும்போதுஇந்த ஆயிரக்கணக்கான வாக்குகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அனைவரும் உணரவேண்டும்.
பாம்பீச், மியாமி-டே, நசாவ் ஆகிய கவுண்டிகளில் ஆயிரக்கணக்கான வாக்குகளை புளோரிடா தேர்தல் ஆணையம்நிராகரித்துவிட்டது. அதே நேரத்தில் மோசடி வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
இதனால் தான் வழக்குத் தொடர்ந்துள்ளேன் என்கிறார் கோர்.
கோரின் செல்வாக்கு சரிகிறது:
புளோரிடாவில் 537 வாக்குகள் வித்தியாசத்தில் புஷ் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதை கோர் ஏற்க மறுத்துவரும் நிலையில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தக் கருத்துக் கணிப்புகளில் மக்கள் அல்கோருக்கு எதிராக குரல் கொடுப்பது தெரியவந்துள்ளது. தேர்தல்இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர கோர் முயல வேண்டும் என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 60 சதவீத அமெரிக்கர்கள் கோர் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்கின்றனர். இவர்களில்3ல் 1 பகுதியினர் கோரின் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்சி அமைக்க புஷ் தீவிரம்:
இதே நேரத்தில் வெள்ளை மாளிகையில் ஆட்சியை அமைக்க தான் தயாராகி வருவதாக குடியரசுக் கட்சியின்வேட்பாளர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
கோர் வழக்குகளை கைவிட வேண்டும் என ஜார்ஜ் புஷ் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
ஆட்சியை அமைப்பதிலும் புஷ் தீவிரம் காட்டி வருகிறார். தனது அரசின் வெளியுறவுச் செயலாளராக முன்னாள்ராணுவத் தளபதி காலின் பாவலையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கன்டோலிஸ்ஸா ரைசையும் ஜார்ஜ் புஷ்நியமிக்க உள்ளார். வழக்குகள் தொடர்வதால் இந்த நியமன அறிவிப்புகளை புஷ் ஒத்தி வைத்துள்ளார்.
புளோரிடா சுபரீம் கோர்ட் வழக்கு:
இப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மற்றும் புளோரிடா சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றின கையில் தான் அடுத்துஜனாதிபதி யார் என்ற முடிவு உள்ளது. பாம்பீச் கவுண்டியில் வழங்கப்பட்ட குழப்பமான வாக்குச் சீட்டு தான் தனதுதோல்விக்குக் காரணம் எனக் கூறி புளோரிடா சுப்ரீம் கோர்ட்டில் தான் கோர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சி அளிக்க செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை நேரம்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குள் 2 கட்சியினரும் தங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும்.இதன் பின்னர் தான் முழு விவாதமும், விசாரணையும் தேவையா என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கும்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் வழக்கு:
அதே போல புளோரிடாவில் கையால் வாக்குகள் எண்ணப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்கசுப்ரீம் கோர்ட்டில் கோர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இங்கு நிராகரிக்கப்பட்ட பல வாக்குகள் தனக்குக்கிடைத்திருக்க வேண்டியவை என்கிறாக் கோர்.
இந்த வழக்கு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடக்கிறது.
ஜனவரி 20ல் புதிய ஜனாதிபதி:
இந் நிலையில் 2001ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக பதவியேற்பார் என்றுசெய்திகள் பரவி வருகின்றன.
ஆனால், அவருக்கு தண்ணி காட்டி வருகிறது ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேசன். வழக்கமாக புதியஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவி ஏற்கும் முன் வாஷிங்டனில் தனியே ஒரு அலுவலகத்தில் இருந்தவண்ணம் செயல்பட முடியும். இதற்காக பெரிய அலுவலகமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அலுவலக அறையை புஷ்சுக்குக் கொடுக்க முடியாது என ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேசன்கூறிவிட்டது. வழக்குகள் நிலுவையில் இருப்பதால் புஷ்சுக்கு இந்த அறையை ஒதுக்க முடியாது எனக் கூறிவிட்டது.
அதே போல பதவி ஏற்புக்குத் தயாராக ஒதுக்கப்படும் 5.3 மில்லியன் டாலர் பணத்தையும் தர முடியாது எனவும்கூறிவிட்டது.
இதையடுத்து வெறுத்துப் போன ஜார்ஜ் புஷ் கட்சி வாடகைக்கு ஒரு அலுவலகத்தைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது.இதற்காக 5000 டாலர் வரை நன்கொடை அளிக்கலாம் எனவும் பொது மக்களுக்கு அக் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
ஒரு வாக்கை கூட விடக் கூடாது:
தமிழ் பட ஹீரோ மாதிரி, "ஆத்தா நான் ஜெயிச்சுட்டேன்" என்பது மாதிரி குரல் கொடுத்துக் கொண்டு புஷ் ஆட்சிஅமைக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், எந்த வாக்கையும் விடக் கூடாது. எந்த ஒரு ஓட்டும் நிராகரிக்கப்படக் கூடாது. எல்லாத்தையும் எண்ணுங்க,ஒண்ணையும் விடாதீங்க என கூறிக் கொண்டு நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார் கோர்.












Click it and Unblock the Notifications