வீரப்பன் இந்தியாவில் தான் இருக்கிறானா? ஜெ. கேட்கிறார்
சென்னை:
வீரப்பன் இந்தியாவில் தான் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்துமாறு மத்திய அரசை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாகேட்டுக் கொண்டுள்ளார்,
சென்னையில் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:
வீரப்பனை பிடிக்க கமாண்டோ படைகளை அனுப்பும் முன்பு மத்திய அரசு முதலில் வீரப்பன் இந்தியாவில் தான் இருக்கிறானா என்பதைஉறுதி செய்து கொள்ள வேண்டும்.
ராஜ்குமார் விடுதலை பற்றிய உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டன. கருணாநிதி ராஜ்குமார் விடுதலை விஷயத்தில்கள்ளத்தனமான முகமூடியை போட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கடத்தல் நாடகம் காங்கிரஸ் கட்சியின் எஸ். எம். கிருஷ்ணா, திராவிட கழகத்தின் கொளத்தூர் மணி தமிழ் மாநில காங்கிரசின்ராமராஜன், பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் ராமதாஸ். மதிமுகவின் காைே. சமதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் போன்ற அரசியல்வாதிகளையும் உள்ளடக்கியது.
ராஜ்குமாரின் விடுதலை வீரப்பனை தப்பிக்க வைக்கும் முயற்சியுமாகும்.
வீரப்பன் காட்டை விட்டோ அல்லது நாட்டை விட்டோ தப்பிப்பதற்காகத்தான், ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டு 10 நாட்களுக்கு பின்னர்அதிரடிப்படையினருக்கு வீரப்பனை பிடிக்குமாறு ஆணையிடப்பட்டது.
பத்திரிக்கை செய்திகளை வைத்து பார்க்கும் போது ராஜ்குமார் விடுதலைக்கான வழிமுறைகளை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன்யாழ்பாணத்திலிருந்து வகுத்துக் கொடுத்திருக்கிறார் என தெரிய வருகிறது.
ராஜ்குமார் நவம்பர் மாதம் 11-ம் தேதி இரவே விடுதலை செய்யப்பட்டுவிட்டார். அன்று காலை நெடுமாறன் தலைமையிலானதூதுக்குழுவினர் வீரப்பனை அவனது இடத்தில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ராஜ்குமாருக்கு கொடுக்க வேண்டியதுணிகளையும் கொடுத்துள்ளனர்.
அதன் பின் அவர்கள் த.மா.கா.வின் தொண்டர் ராமராஜன் என்பவரின் பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.ராஜ்குமார்விடுதலை செய்தி 15-ம் தேதி காலை 11 மணிக்கு பெங்களூரிலிருந்து அறிவிக்கப்பட்டது.
ராஜ்குமார் பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது தமிழக முதல்வர் கருணாநிதியுடன் மூன்று முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசியிருக்கிறார். கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் 13 முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். மத்திய அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசுடன் அரை மணி நேரம் தொலை பேசியில் பேசி இருக்கிறார்.
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுடன் தொடரப்புடையவர்கள் தேச விரோத குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும்என பல புகார்களை கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications