போர் நிறுத்தம்: காஷ்மீரில் அமைதியாய் தொடங்கியது ரம்ஜான் நோன்பு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ரம்ஜான் மிக அமைதியாகத் தொடங்கியது.
பக்தர்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள மசூதியில் ரம்ஜான் நோன்பைத் தொடங்கினர். முன்னதாக, நவம்பர் 19 ம் தேதி, பிரதமர் வாஜ்பாய், ரம்ஜான்மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார். இது திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
அங்கு வாழும் முஸ்லீம்கள், நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் திங்கள்கிழமை நள்ளிரவு தங்கள் வீடுகளிலிருந்து மசூதிக்குச் சென்று ரம்ஜான்விரதத்தைத் தொடங்கினர்.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருட ரம்ஜான் குறித்து, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்சி டிரைவர் அப்துல் மஜித் கூறுகையில்,இவ்வளவு வருடங்களாக, ரம்ஜானை சுதந்திரமாகக் கொண்டாட முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய விடுதலையாக உள்ளது.
முன்பெல்லாம் ராணுவ வீரர்கள், டாக்சியில் செல்லும் போது பலமுறை சோதனை செய்த பின்பே எங்களை விடுவர். ஆனால் இந்த முறை 300கிலோமீட்டர் தூரம் வரை ராணுவ வீரர்களின் தலையீடு இல்லாமலே நான் டாக்சியை ஓட்டி வந்து விட்டேன் என்றார்.
ரபி மிர் என்பவர் காஷ்மீரிலுள்ள தனது மகன் குடும்பத்துடன் இந்த வருட ரம்ஜானைக் கொண்டாடுகிறார். அவர் கூறுகையில் கடந்த ஆறு வருடமாக நான்காஷ்மீரில் ரம்ஜானைக் கொண்டாடி வருகிறேன். ராணுவ வீரர்களின் குறுக்கீடுகள், வெறுப்பேற்ற வைக்கும்.
எந்த வித குறுக்கீடும் இல்லாமல் ரம்ஜானைக் கொண்டாடுவதையே நான் விரும்புகிறேன். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்தமகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications