பேச்சுவார்த்தை: பிரபாகரனுக்கு தமிழர் கட்சி ஆதரவு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், எந்த வித நிபந்தனையுமின்றி, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதற்கு ஆதரவுதெரிவிப்பதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கையின் முக்கிய தமிழர் கட்சியான தமிழர் விடுதலை முன்னணித் தலைவர்களில் ஒருவரான அனந்தசங்கரி கூறுகையில், வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் போர்நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது இயலாத காரியமாகும். இந்த நிலையில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குபிரபாகரன் தயாராக இருப்பது வரவேற்கத்தக்கது.
இனப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாக இருப்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதனால்இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அரசு தரப்பில் இதற்குசாதகமான பதில் தெரிவிக்கப்பட வேண்டும்.
இனப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் நார்வே தூதுக்குழு ஈடுபட்டுள்ளது. தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், புலிகள் தலைவர்பிரபாகரனை சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் இலங்கை பிரச்சனைக்கு விரைவில் வேற்று நாடுகளின் சமரச முயற்சியுடன் நல்ல தீர்வு காண்பதற்குரியஅறிகுறிகள் தென்படுகின்றன.
நார்வே தூதுக்குழுவினரிடம் பேசிய பிரபாகரன், இலங்கை அரசு முன்வந்தால் எந்த வித ஆட்சேபணையும் இன்றி இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இலங்கை பிரச்சனைக்கு விரைவில் வேற்று நாடுகளின் சமரச முயற்சியுடன் நல்ல தீர்வு காண்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன என்றார்.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார்:
முன்னதாகப் புலிகள் தலைவர் பிரபாகரன் தெரிவிக்கையில், நாங்கள் எந்தவித நிபந்தனையும் முன் வைக்க விரும்பவில்லை. தமிழர்கள் அதிகம் வாழும்பகுதிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். மேலும் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்கள் தரப்பினரின் விருப்பம் என்றார்.
கண்ணிவெடி விபத்தில் 7 பேர் பலி:
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்று பிரபாகரன் கூறிய சில மணிநேரங்களிலேயே அனுராதபுரா பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் கண்ணி வெடியில் சிக்கியது. இதில் 4 பள்ளிக்குழந்தைகள் உள்பட 7 பேர் இறந்தனர். 26க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
மாவீரர்கள் வாரம்:
கடந்த வாரம் விடுதலைப்புலிகள் மாவீரர்கள் வாரம் கொண்டாடினர். பிரபாகரனின் 46 வது பிறந்தநாளான ஞாயிற்றுக்கிழமை மாவீரர்கள்வாரம் முடிந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரபாகரன் கூறுகையில், கடந்த 18 வருடங்களாக இலங்கை இனப்பிரச்சனை நடந்து வருகிறது.
விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 16, 000 புலிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் சர்வதேசஅளவில் நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சனைக்குசுமூகமான தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதி, அங்கு வாழும் மொழி சிறுபான்மையினரான தமிழர்களுக்கே சொந்தமானதாகுமே தவிர அங்கு வாழும் சிங்களஇனத்தவருக்குச் சொந்தமானதல்ல என்று கூறினார்.
அரசுத் தரப்பில் மெளனம்:
இருப்பினும் பிரபாகரனின் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்புக்கு இலங்கை அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த வித பதிலும் இல்லை.அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஐரோப்பிய சுற்றுலாப் பயணத்தில் இருப்பதால் அவர், நாடு திரும்பியதும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கலாம் என்றுதெரிகிறது.
மூத்த அரசு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமர் விக்ரமசிங்கே வடக்கு யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளை முற்றிலும்ஒழிக்காமல் விடமாட்டோம். அவர்களை அங்கிருந்து வேரருக்கும் வரை ராணுவ வீரர்களை அங்கிருந்து நீக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் பிரபாகரனின் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு எந்த அளவுக்கு பலன் தரும் என்று கூற முடியாது என்று சந்தேகம்எழுப்பியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications