மோகன் கமிஷன் அறிக்கைக்கு புதிய தமிழகம் எதிர்ப்பு
சென்னை:
மோகன் கமிஷன் அறிக்கையை திரும்பப் பெறக் கோரி டிசம்பர் 6-ம் தேதி கோட்டையை நோக்கி ஊர்வலம்நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசி டாக்டர் கிருஷ்ணசாமி, சமீபத்தில் சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்ட மோகன்கமிஷன் அறிக்கையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் விடுதலைக்கு போராடிய மக்களைகொச்சைப்படுத்தியும், அவர்களின் சாவுக்கான உண்மைக் காரணங்களை மூடி மறைத்தும் செய்திகள் வந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு டிசம்பர் 6-ம் தேதி கோட்டையை நோக்கி ஊர்வலம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி அன்று காலை 8.00 மணி தல் 11.00 மணி வரையிலும்,அம்பேத்கார் குருபூஜை நடைபெறும்.
அன்று காலை 11.30 மணிக்கு மேல் மோகன் கமிஷன் அறிக்கையை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு அரசைவலியுறுத்தி கோட்டையை நோக்கி ஊர்வலம் நடைபெறும்.
நடிகர் ராஜ்குமார் விடுதலைக்கு பாடுபட்டவர்கள் மனிதாபிமானத்தோடு செயல்பட்டவர்கள். அவர்களை தேவைஇல்லாமல் விசாரணைக்கு உள்படுத்தக்கூடாது.
ராஜ்குமார் வீரப்பன் பிடியில் இருந்த போது கர்நாடக அரசு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாகநடைமுறைப்படுத்த வேண்டும். பெங்களூரில் திருவள்ளூர் சிலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். வீரப்பனை காட்டில் இருந்து விடு விக்கவும், பழையமனநிலைக்கு கொண்டு வரவும் நடிகர் ராஜ்குமாரையே தூதுவராக அனுப்ப வேண்டும்.
மாஞ்சோலை பிரச்சனையில் இரண்டாவது கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கார் ரத யாத்திரைமூலம் பிரச்சாரம் செய்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டி மாஞ்சோலையில் முற்றுகை போராட்டம்நடத்தப்படும் என்றார் கிருஷ்ணசாமி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications