அசாருதீன், அஜய்சரமாவுக்கு வாழ்நாள் தடை
டெல்லி:
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட அசாருதீனுக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல அஜர் ஷர்மாவுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகியோருக்கு 5ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அசாரூதீனும், அஜய் சர்மாவும் இனி எந்தப் போட்டியிலும் விளையாட முடியாது. கிரிக்கெட் விளையாடக் கூடாது என வாழ்நாள்தடை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த கடுமையான முடிவை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அசாருதீன், அஜய் ஷர்மா, மனோஜ் பிரபாகர், மோங்கியா. ஜடேஜா ஆகியோர் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக சி.பி.ஐ.யால்குற்றம் சாட்டப்பட்டனர்.
இதை விசாரிக்க கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்ட சி.பி.ஐ.யின் முன்னாள் இணை இயக்குனர் மாதவன், அசாருதீன் மேட்ச்ஃபிக்சிங்கில் ஈடுபட்டுள்ளதையும் மோங்கியாவைத் தவிர மற்றவர்கள் சூதாட்ட ஏஜென்டுடன் தொடர்பு கொண்டிருந்ததையும்அணியின் மருத்துவர்அலி இரானி சூதாட்ட ஏஜென்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததையும் தனது அறிக்கையில் விவரமாகதெரிவித்தார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமையன்று கல்கத்தாவில் கூடிய கிரிக்கெட் வாரியததின் சிறப்பு பொதுககுழு கூட்டம், அசாருதீனுக்கும்.அஜய் ஷர்மாவுக்கும் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என வாழ் நாள் தடை விதித்துள்ளது.
இது குறித்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கையில், தான் தான் இரண்டு ஒரு போட்டிகளில் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதைஅசாரூதினே ஒப்புக் கொண்டுவிட்டார். அதனால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் பொதுக்குழு கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
பொதுக்குழுவில் பங்கு பெற்ற 30 உறுப்பினர்களில் 28 உறுப்பினர்கள் இந்த முடிவை ஆதரித்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்அஜய் ஷர்மாவும் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார் என்பதால் அவருக்கும வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
அஜய் ஜடேஜா, முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் ஆகியோர் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடக்கூடாது என தடைவிதிக்கப்ப்டடுள்ளது என கூறியுள்ளது.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சென்னையில் கூறுகையில் கிரிக்கெட் அணியின் மருத்துவர் அலி இரானிக்கும் 5ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
தண்டனை அளிக்கப்பட்டவர்களில் ஜடேஜா மட்டும் சர்வ தேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிகிறுது.அஜய் சர்மா, மனோஜ் பிரபாகர் ஆகியோர் கிரிக்கெட்டிலிருந்து முன்னரே ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications