இது இந்தியன் வயாக்ரா
கோவை:
இந்திய வரலாற்றில் இல்லாத மருத்துவமே இல்லை. ஆர்யபட்டா முதல் உள்ளூர் நாட்டு வைத்தியர் வரை இந்திய மண்ணில் விளையாத மூலிகைஇல்லை.
ஒவ்வொரு செடிக்கும் ஒரு மருத்துவக் குணத்தை ஆராய்ந்து அவற்றை நூல்களாக எழுதியுள்ளனர். சித்தர் மருத்துவம் இதில் முன்னிலை வகிக்கிறது.
இந்த வகையில் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்த இன்றைய அறிவியல் உலகம் முயன்று வருகிறது. சித்த மருத்துவடாக்டர்கள், மேலை நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட அலோபதி மருத்துவம் தரும் பலன்களை சித்த மருந்துகள் தரும் வகையில் உருவாக்கி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட, விற்பனையான "வயாக்ரா மருந்தை, சித்த மருத்துவ மூலிகைகளைச் சேர்த்து உருவாக்கியுள்ளனர்சென்னையைச் சேர்ந்த கேர் அன் கியூர் லிமிடெட் என்ற நிறுவனத்தினர்.
இந்த மருந்தின் குணம் பற்றி டாக்டர் கணேசன் நிருபர்களுக்கு விளக்கியதாவது:
அலோபதி மருத்துவத்தில் உருவாக்கப்பட்ட "வயாக்ரா பல பக்க விளைவுகளை உண்டாக்கியது. சிலருக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டது.
இந்த கோளாறால், இறப்பும் ஏற்பட்டது. ஆனால், இந்திய மருத்துவ முறைகளில் உடலுக்கு தெம்பூட்டும் வகையிலும் நீண்ட நாட்கள் உடலுக்குஊக்கம் தரும் வகையிலும் புதிய மாத்திரையை எங்களது கேர் அன் கியூர் நிறுவனம், ஜாய் என் ஜாய் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மருந்து நூறு சதவீதம், பக்க விளைவற்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சித்த வைத்திய முறையில் இதனைத் தயாரித்துள்ளோம்."இந்தியன் வயாக்ரா எனறே இதனைக் கூறலாம்.
இதில் பொன் ஆம்பர் என்ற திமிங்கலத்தின் எச்சத்தால் உருவாக்கப்பட்ட மருந்து உள்ளடக்கியுள்ளது. இந்த பொன் ஆம்பர் கடலோரப் பகுதிகளில்கிடைக்கிறது.
இதன் மருத்துவக் குணங்கள் மிகவும் அற்புதம் வாய்ந்ததாக உள்ளது. இதனுடன், மதனகாம்பு, அஸ்வகந்தா, சாலாமிஸ்ரி போன்ற மூலிகைகள்கலக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகைப் பொருட்களால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
அதேசமயம், வயாக்ராவைப் போன்று உடனடியான உணர்ச்சித் தூண்டுதல் இருக்காது. ஜாய் என் ஜாய் எனப்படும் இந்த மாத்திரையைஉட்கொள்வதால் நீண்ட நேர இன்பம் கிடைக்கும்.
உடலில் எவ்வித சோர்வும் ஏற்படாது. ஆண், பெண் இருவரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய பாலியலில் சிறந்த மருந்தாக இதனைஅறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதன் விலையும் அதிகம் இல்லை. இரு மாத்திரைகள் உள்ளடக்கிய ஒரு பாக்கெட்டின் விலை ரூ. 30 ஆக நிர்ணயித்துள்ளோம் என்றார்.
இந்த மாத்திரையின் அறிமுக விழாவில், கோவை அழகு பார்மசி நிறுவனர் அழகு ஜெயபாலன் உள்பட பலர் கலந்த கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications