அந்த ஏப்ரல் 7ம் தேதி...

Subscribe to Oneindia Tamil

இந்த மேட்ச் ஃபிக்சிங் விவகாரம் கடந்த 6 மாதங்களில் பல அவதாரங்களை எடுத்தது. கிரிக்கெட் வீரர் டிவியில் கதறிக் கதறிஅழுத அவமானம்.. ஒருவர் மேல் ஒருவர் சேற்றை வீசிக் கொண்ட கேவலம்.. திருடனுக்கு தேள் கொட்டியது போல் திண்டாடியவீரர்கள் என நாளொரு மேனியும் புகார்களும், புது புது குற்றச்சாட்டுகளும் குவிந்தன.

ஆனால் உணவின்றி உறக்கமின்றி கிரிக்கெட் மேட்சை பார்த்து நம் நாடு வெற்றி பெற வேண்டும் என்ற பேராவலோடு ஏங்கித்தவித்த கோடானுகோடி ரசிகர்கள் தான் இவர்கள் பணத்தாசையால் முட்டாள்க்கப்பட்டார்கள்.

இவர்கள் அனைவகும் தோலுரிக்கப்பட்ட நாள் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி. அன்றுதான் டெல்லி போலீசார் தென்ஆப்பிரிக்கஅணித்தலைவர் ஹான்சி குரோனியே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டினர். அத்ைத் தொடர்ந்து இந்தியவீரர்களின் பெயர்களும் அடிபடத் தொடங்கின. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பெயர்கள் கிரிக்கெட்சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வரத் தொடங்கின.

பொதுமக்களின் வற்புறுத்தலால் விளையாட்டுத்துறை அமைசசர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனாலும் கபில் தேவ்மீது மனோஜ் பிரபாகர் கூறிய குற்றச்சாட்டுதான் பெரிய பூகம்பத்தை கிளப்பி விட்டது.

முதன்முதலாக கிரிக்கெட் உலகிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற புகழ் பெற்ற கபில்தேவின் மீது சேற்றை வாரிஇறைத்தது இந்த குற்றச்சாட்டு. நான் 20 வருடமாக கிரிக்கெட் விளாைடி வருகிறேன். நான் என் தூய்மையைப் பற்றி இப்போதுநிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என கபில் தேவ் கூறினார். டிவியில் அழுதார்.

பிரபாகர் ரகசியமாக எடுத்து வைத்திருந்த வீடியோ படங்கள் மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைந்தன.

ஜுன் மாதத்தின் மத்தியில் ஹான்சி குரோனியே அசாருதீன் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று எம்.கே. எனஅழைக்கப்படும் முகேஷ் குப்தாவை எனக்கு அறிமுகம் செய்து விட்டு, எங்கள் இருவரையும் அந்த அறையில் தனியாகவிட்டுவிட்டு சென்று விட்டார் என கூறியது அசார் மீது இருந்த மேட்ச் ஃபிக்சிங்கில் குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாகஅமைந்ததது.

அதைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், இன்றைய கிரிக்கெட் வீரர்களும் டெல்லியில் இருக்கும் சி.பி.ஐ.தலைமையகத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

ஜூலைமாதம் 7-ம் தேதி கபில் தேவ், அசாருதீன், ஜடேஜா, மோங்கியா, நிகில் சோப்ரா ஆகியோரது வீட்டை சி.பி.ஐ.சோதனையிட்டது. இதனால் வீரர்கள் மீது மக்களுககு இருந்த சந்தேகம் மேலும் வலுத்தது.

இதைத் தொடர்ந்து அசார், ஜடேஜா, மோங்கியா. சோப்ரா ஆகியோர் ஐ.சி.சி. கோப்பைககான அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.சில நாள் கழித்து கபில் தேவ தனது பயிற்சியாளர் பணியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் அணித்தலைவர் ஜடோஜா கூறுகையில், நான் முதல் முதலாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து கூறிவருவதுஒன்றுதான். நான் என்னை பாதுகாத்துக் கொள்வதற்காக எதையும் கூறவில்லை. என் நிலையை விளக்க சந்தர்ப்பம் அளியுங்கள்.எனது கருத்துக்களையும் பாருங்கள். நான் உங்களுக்கு பல விஷயங்களை தெரிவித்த்திருக்கிறேன். ஆனாலும் என் மீது இன்னும்பழி சொல்வது நியாமல்ல என்றார்.

விசாரணைகள் முடிக்கப்பட்டு செவ்வாய்கிழமை தண்டனை தரப்பட்டது. கிரிக்கெட் வாரியம் குற்றம் செய்தவர்களுக்குஅளித்துள்ளது.

கிரிக்கெட்டுக்கு மீண்டும் நல்ல பெயர் வாங்கித் தரத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறது கிரிக்கெட்வாரியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+