பிரதமர் ஏன் அப்படிப் பேசினார்?
டெல்லி:
பாரதீய ஜனதாவில் அத்வானிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் அணிதிரண்டு வருவதை அடுத்து தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ளவே ராமர் கோவில் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைபிரதமர் வாஜ்பாய் தெரிவித்துள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி இன்னும் முடிக்கப்படாமலேயே உள்ளது என பிரதமர் வாஜ்பாய் புதன்கிழமைநிருபர்களிடம் கூறினார். இதற்கு கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது வாஜ்பாய்க்கு முன்பேதெரிந்தது தான். இருந்தாலும் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்பது குறித்து அரசியல் நிபுணர்கள் கூறுவதாவது:
1998ம் ஆண்டில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் வென்ற நிலையில் அத்வானியைத் தான் பிரதமராக்க வேண்டும் எனஆர்.எஸ்.எஸ். நிர்பந்தித்து. ஆனால், 25 கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில்அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொள்ளும் ஒரே தலைவராக வாஜ்பாய் உருவெடுத்தார்.
இது தவிர பாரதீய ஜனதாவுடன் பல மதசார்பற்ற கட்சிகளையும் கூட்டணிக்கு வரவழைத்தவர் அத்வானி என்பதுகுறிப்பிடத்தக்கது. வென்றால் வாஜ்பாய் தான் பிரதமர் என அறிவித்து பல கட்சியினரையும் கூட்டணக்கு அழைத்து வந்தார். இதன்மூலம் பாரதீய ஜனதாவுக்கு பெரும் வெற்றியையும் தேடித் தந்தார்.
வாஜ்பாய் பிரதமராவதை அத்வானி முழு மனதுடன் ஏற்றுக் கொண்டாலும் பா.ஜ.கவின் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ்சில் இதற்குஎதிர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. இப்போதும் அத்வானியை பிரதமராக்க வேண்டும் என்று தான் ஆர்.எஸ்.எஸ்.விரும்புகிறது.
இந் நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதும்குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து அத்வானியை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், முலாயம் சிங் யாதவின் கட்சி ஆகியவை திட்டமிட்டுதாக்கி வருகின்றன.
அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தையே இக் கட்சிகள் ஸ்தம்பிக்க வைத்துள்ளன. நாடாளுமன்றம் கடந்த3 நாட்களாக நடக்கவேயில்லை.
இந் நிலையில் அத்வானிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., சிவசேனா, பா.ஜ.கவின் தீவிர ஆதரவாளர்கள் ஆகியோர்அணி திரண்டு வருகின்றனர். அத்வானிக்கு ஆதரவாக பிரதமர் பேசியே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் தான் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தே எதிர்ப்புக் கிளம்பும் என்று தெரிந்தும் வாஜ்பாய் இந்தக் கருத்தைத்தெரிவித்துள்ளார் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தக் கருத்தின் மூலம் கட்சியின் தனது நிலையை வாஜ்பாய் தக்கவைத்துக் கொண்டுவிட்டார் எனவும் கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications