வீரப்பன்: வந்து சேர்ந்தது எல்லைப் பாதுகாப்புப் படை
ஈரோடு:
எல்லைப் பாதுகாப்பு படையின் முதல் படைப் பிரிவு ஈரோடு வந்தது. இந்தப் பிரிவுபண்ணாரியில் முகாமிட்டு முதல் கட்ட ஆயத்தப் பணிகளைக் கவனிக்கத்தொடங்கியுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும்இருக்க, இதன் முதல் படைப் பிரிவு பண்ணாரிக் காட்டில் முகாமிட்டுள்ளது.
இந்தப் படை பிரிவின் வேலை, மற்ற படையினருக்குத் தேவையான அடிப்படைவசதிகளைச் செய்து தருவதாகும். இதன்படி, உணவு தயாரித்தல், சீருடைகளைஅமைத்தல், டென்ட் அடித்தல், குடிநீர் வழங்குதல் உட்பட பல பணிகளை இந்தப் படைபிரிவினர் மேற்கொள்ள விருக்கின்றனர்.இதற்கான பொருட்களும் வந்திறங்கியுள்ளன.
பண்ணாரி முகாமில், 200 கூடாரம் அமைக்கப்படும் துணிகள், 500 லிட்டர் குடிநீர்தொட்டிகள், கூடாரம் அமைக்கத் தேவையான குச்சிகள், 10 மண்ணெண்ணெய் நவீனவிளக்குகள், உணவு சமைக்கவும் தேனீர் தயாரிக்கவும் தேவையான ஸ்டவ்கள்ஆகியவை முகாமில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பொருட்களைப் பாதுகாக்கும் பணியில் 24 மணி நேரமும் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications