தேயிலை இறக்குமதிக்கு தடை கோரி போராட்டம்
கோவை:
தேயிலை இறக்குமதியை தடை செய்ய வேண்டும், இல்லையென்றால், இறக்குமதிவரியை 150 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனக் கோரி தேயிலைத் தோட்டஅதிபர்கள் வால்பாறையில் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைஎஸ்டேட்டுகள் நிறைந்துள்ளன. சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இங்குபணியாற்றுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்துபசுந்தேயிலை உற்பத்தி செய்து வந்த நீலகிரி விவசாயிகள், இதனால் கடும்பாதிப்படைந்தனர். இந்தப் போராட்டம் மானியம் அளிக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.
இப்போது வால்பாறையில் தேயிலைத் தாட்ட அதிபர்கள் போராட்டத்தைதுவங்கியுள்ளனர்.
சர்வதேச ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், இலங்கை, இந்தோனேஷியா, கென்யாபோன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் தேயிலை மிக குறைந்த விலையில்இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது.
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் தேயிலை தற்போது இந்தியாவில் குறைந்தவிலைக்கு கிடைக்கிறது. இந்த தேயிலையை வாங்கி, அதனுடன் கலந்து ஏற்றுமதிசெய்யப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் தேயிலைத் தரம்குறைந்து ஏற்றுமதி பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
வால்பாறை தேயிலை எஸ்டேட்டுகளில், தேயிலை உற்பத்தி செலவு கிலோ ஒன்றிற்குரூ. 60 வரை ஏற்படுகிறது. ஆனால், இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளில்தொழிலாளர்களுக்கு அரசே அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விடுவதால்அங்கு உற்பத்தி செலவு மிகவும் குறைவாக உள்ளது.
இந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் தேயிலைகளுக்கு 40 சதவீதம் இறக்குமதிவரி விதிக்கப்பட்டாலும்., கிலோ ஒன்றின் விலை ரூ. 28 முதல் 45 வரை தான்இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செலவே ரூ. 60 ஆகிறது. எனவேஇறக்குமதி தேயிலைக்கு 150 சதவீதம் இறக்குமதி விதித்தால் மட்டுமே, தேயிலைதொழிற்சாலைகள் நலிவடையாமல் பாதுகாக்க முடியும்.
மேலும், தேயிலைத் தொழில் நலிவடைந்து வருவதால், தோட்டத் தொழிலளர்களின்கூலியை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். கூலித்தொழிலாளர்களின் சம்பளக் குறைப்பு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகிறது
தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தைப் போக்க வேறு வழி எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை என தோட்டத் தொழிலதிபர்கள் தெரிவித்தனர். வால்பாறையில் நடந்தகடையடைப்பு போராட்டம் அடையாள போராட்டம். இது தொடராமல் பாதுகாக்கஅரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications