அமைச்சர் நீக்கம் ஏன்? புதுவை முதல்வர் விளக்கம்
பாண்டிச்சேரி:
எந்த வித வற்புறுத்தலுக்காகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணன் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்றுபாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
பாண்டிச்சேரி அமைச்சரவையிலிருந்து கண்ணன் நீக்கப்பட்டதால் அமைச்சரவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. யாருடையை வற்புறுத்தலுக்காகவும் அவர்நீக்கப்படவில்லை.
ஒரு அமைச்சர் என்பவர் தனது பொறுப்புக்களை உணர்ந்து, சட்டசபையின் வரைமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் கண்ணனோ சபைவிதிமுறைகளை மீறி நடந்து கொண்டார். அதனால் தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றார்.
முன்னதாக, சபாநாயகர் சுப்ரமணியம் கூறுகையில், தேனி ஜெயக்குமார் என்னிடம் ஒரு மனுக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர், அமைச்சர்ஜெயக்குமாருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு வெறும் வதந்தியாகும்.
அந்தப் பேச்சில் சிறிதளவும் உண்மையில்லை. அது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இது எனது கொளரவத்துக்கு ஏற்பட்ட இழுக்கு. என் மீதுஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி அமைச்சர் கண்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு குறித்து பரிசீலிக்கப்படும்என்று கூறினார் சபாநாயகர் சுப்ரமணியம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications