டிச. 24-ல் எம்.ஜி.ஆர். நினைவு நாள் பேரணி
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி இம்மாதம் 24-ம் தேதி சென்னையில் பேரணி நடைபெறும் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி மரணமடைந்தார். ஆண்டு தோறும் அந்த தினத்தன்றுஅ.தி.மு.க,வினர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த ஆண்டும் இம்மாதம் 24-ம் தேதி அமைதி ஊர்வலத்தில் ஈடுபடப்போவதாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தின் அறிக்கையில்தெரிவிக்கப்படிருக்கிறது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அ.இ.அ.தி.மு.க.வின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்த நினைவு நாள் இந்த மாதம் 24-ம் தேதி வருகிறது. அன்று அண்ணாசாலையில் இருக்கும்அண்ணா சிலையிலிருந்து கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெறும்.
காலை 9 மணியளவில் இந்த ஊர்வலம் தொடங்கி கடற்கரையிலிருக்கும் எம்.ஜி.ஆர் சமாதியை சென்றடையும்.
அமைதிப் பேரணியில் தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் கலந்துகொண்டு எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்துவார்கள்.
பின்னர் எம்.ஜி.ஆர். நினைவக வளாகத்தில் மேற் கொள்ளப்படவிருக்கும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் ஜெயலலிதா கலந்து கொள்வார் எனதெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications