கருணாநிதியை மிரட்டுகிறார் ராமதாஸ் .. த.ரா.கா.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வர் கருணாநிதியை மிரட்டுகிறார் என தமிழக ராஜீவ் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கிள்ளிவளவன் தெரிவித்திருக்கிறார்.
பா.ம.க. நிறுவனர் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்தால் தமது கட்சி கூட்டணியை விட்டு விலகும் என கூறியிருந்தார். அதற்குபதிலளித்து தமிழக ராஜீவ் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் கிள்ளி வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வாழப்பாடியும், பா.ம.க.வும் ஒரே கூட்டணியில் நீடிக்கமுடியாது,
வாழப்பாடியை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என ராமதாஸ் கருணாநிதியுடன் 4 முறை நேரில் பேசியதாகவும், 3 முறை கடிதம் எழுதியதாகவும்கூறியிருந்தார்.
அவ்வாறு நீக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகி விடுவோம் எனவும் கூறியிருந்தார்,
எந்த ஒரு கூட்டணியிலும் நீடிப்பதும், விலகுவதும் கொள்கை ரீதியானது. தனிப்பட்டவர்கள் முடிவைப் பொறுத்து கூட்டணி அவைதில்லை. பொதுவானஉடன்பாட்டின் அடிப்படையில் தான் அமைகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தி தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் ராமதாஸ்தான். ஆனாலும் அவர் கூட்டணியில் நீடித்தால் நாங்கள் விலகி விடுவோம்என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை.
முதல்வரை மிரட்டுகிறார் ராமதாஸ்:
ராமதாஸ் தமிழக முதல்வரை மிரட்டுகிறார். அவரது இந்த மிரட்டல் கூட்டணியை பலவீனப்படுத்தும் திட்டம், இது திட்டமிட்ட சதி என்பதில் எந்த விதசந்தேகமும் கிடையாது.
சென்ற சில மாதங்களாக ராமதாஸ் தி.மு.க.ஆட்சியை குறை கூறியும், கருணாநிதியை பகிரங்கமாக விமர்சித்தும் வருகிறார். அவரது செயல்கள் அவர்யாரிடமோ விலை போய் விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது.
கூட்டணியை விட்டு விலகுவது என பா.ம.க. முடிவு செய்து விட்டது. அதற்கான காரணத்தை தேடி வருகிறார் ராமதாஸ். அதன் விளைவுதான் இது போன்றமிரட்டல் அறிக்கைகள்.
ராமதாசின் செயல்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. ராமதாசின் அடையாளம் நாட்டு மக்களுக்கு நன்கு தெளிவாக தெரிந்து விட்டது.சோரம் போவது என முடிவெடுத்துவிட்டால் அதை தடுக்க யாராலும் முடியாது.
ராமசதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்தாலும் விலகினாலும் நாங்கள் அந்த கூட்டணியில் நீடிப்போம். பா.ம.க. கூட்டணியை விட்டு விலகினால் அதுஎந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் எங்கள் கட்சி இறங்காது என தெரிவித்தார்,












Click it and Unblock the Notifications