தோல் பொருள் ஏற்றுமதியில் இந்தியா பின் தங்குகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தோல் பொருட்களின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

பிற நாடுகளால் ஏற்படும் போட்டியைச் சமாளிக்க முடியாமல் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

1998 - 99 ம் வருடங்களில் ரூ. 6,986 கோடியாக இருந்த தோல் பொருள் ஏற்றுமதி, 99- 2000 மாவது ஆண்டில், ரூ. 6, 666 கோடியாகக்குறைந்துள்ளது என்று இந்திய தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் அசோசாம் கமிட்டி சேர்மன் ஆதேஷ் குப்தா கூறுகையில், பிரேசில், அர்ஜென்டினா, சிலி,பெரு மற்றும் கொலம்பியா நாடுகளிலிருந்து வரும் போட்டியைச் சமாளிக்க முடியாமல்தான் இந்தியாவின் தோல் பொருள் ஏற்றுமதி பெருமளவுகுறைந்துள்ளது.

மேலும் மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களின் தரம் மிகவும் அதிகமாக உள்ளதும் இதற்கு மூல காரணம்என்றார் ஆதேஷ் குப்தா.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற