கருணாநிதிக்காக காத்திருக்கும் காளாண்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழக அரசின் தமிழ்நாடு பெண்கள் உதவித் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம்தும்பைப்பட்டியில் பெண்களுக்கென சிறப்பு வளர்ச்சித் திட்டம் அமல்படுத்தப்பட்டுவருகிறது.

இதற்காக சுய சேவைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் காளாண்வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை வளர்ப்போருக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 10,000 பணம் மானியமாகவழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோர், விவசாயத்தொழிலாளர்கள். இந்தத் திட்டம் மூலம் அவர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பெண்களால் வளர்க்கப்படும் காளாண்கள் கிலோவுக்கு ரூ. 40 எனவிற்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 75 சுயசேவைக் குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 குழுக்கள், காளாண் வளர்ப்புக்கான பயிற்சியைபெற்றுள்ளன.

காளாண் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள், தாங்கள் வளர்த்த காளாண்கள் குறித்துபெருமையுடன் உள்ளனர். டிசம்பர் 28-ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதிதும்பைப்பட்டி வரவுள்ளார். அப்போது தாங்கள் வளர்த்த காளாண்களை முதல்வருக்குஅன்பளிப்பாக வழங்க இந்தப் பெண்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற