For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

70 நாட்களாக மரத்தில் தொங்கிய பிணங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை முகப்பேறு பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளி, தன் மனைவியின் நடத்தையில் ஏற்பட்டசந்தேகத்தால் மனமுடைந்து, தன் மகனைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை-மகன் இருவரது சடலங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் 70 நாட்களுக்குப் பிறகுகண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை முகப்பேறு கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் ஊழியர், கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில்சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றார். போன வேகத்தில் அவர் அலறியடித்துக் கொண்டு திரும்பி வந்தார். அவரதுஅலறல் சத்தம் கேட்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அங்கு கூடி விட்டனர்.

அப்போது அங்குள்ள வேப்ப மரத்தில் சிறுவனின் பிணம் தொங்கிக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.சிறுவனின் கழுத்தில் கிடந்த கயிற்றின் மற்றொரு முனையில் மண்டை ஓடு கிடந்தது. மரத்தின் கீழே அழுகி, காய்ந்துபோன உடல் கிடந்தது. இதுகுறித்து உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார்அப்பகுதிக்கு வந்தனர்.

பின்னர் வியாழக்கிழமை காலை கடந்த 2 மாதங்களாகக் காணாமல் போனவர்கள் குறித்த பட்டியல்கள்தயாரிக்கப்பட்டது. மேலும் கண்டெடுக்கப்பட்ட பள்ளிச் சிறுவனின் சீருடையை வைத்து அவனது பள்ளிக்கூடம்கண்டுபிடிக்கப்பட்டது. அப்பள்ளியில் விசாரணை நடந்தது. விசாரணையில் அந்த மாணவனின் பெயர்மணிகண்டன் என்று தெரிய வந்தது.

மாணவர் மணிகண்டன் கடந்த அக்டோபர் 12 ம் தேதி முதல் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிய வந்தது.இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மாணவனின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவரின்வீட்டுக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்த விவரம்:

சென்னை முகப்பேறு 2 வது பிளாக் பகுதியில் குடியிருப்பவர் ராணி. இவரது கணவர் மகேந்திரன். இவர்களுக்குமகேந்திரன் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் இருந்தனர்.

இதற்கிடையே ராணிக்கும், அவரது கணவர் மகேந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தவிஷயம் போலீஸார் வரை போய்விட்டது. போலீஸார் அவர்களை அழைத்து சமாதானப்படுத்த முயன்ற போது,மகேந்திரன் கூறுகையில், எனது மனைவி ராணிக்கும், வேறு ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது.அதனால்தான் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது என்றார். இதையடுத்து ராணி தனது சொந்த ஊரானதிருவண்ணாமலைக்குச் சென்று விட்டார்.

சில மாதங்கள் கழித்து, ராணி தன் சகோதரர்களுடன் வந்து, மகேந்திரனிடம் சமாதானம் செய்ய முயன்றார்.பஞ்சாயத்தார் முன்னிலையில் இந்தப் பேச்சு நடந்தது. பின்னர் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். ஆனால்மீண்டும் அவர்களை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டியது. மனைவியையும் சமாளிக்க முடியாமல், உயிருடன்வாழ்வதும் அர்த்தமில்லாமல் போய் விடவே விரக்தியடைந்த மகேந்திரன், தன் மகனைக் கொன்று, தானும் மரத்தில்தூக்கில் தொங்கி விட்டார் என்று கண்டு பிடிக்கப்பட்டது.சென்னை:

சென்னை முகப்பேறு பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளி, தன் மனைவியின் நடத்தையில் ஏற்பட்டசந்தேகத்தால் மனமுடைந்து, தன் மகனைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை-மகன் இருவரது சடலங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் 70 நாட்களுக்குப் பிறகுகண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை முகப்பேறு கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் ஊழியர், கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில்சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றார். போன வேகத்தில் அவர் அலறியடித்துக் கொண்டு திரும்பி வந்தார். அவரதுஅலறல் சத்தம் கேட்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அங்கு கூடி விட்டனர்.

அப்போது அங்குள்ள வேப்ப மரத்தில் சிறுவனின் பிணம் தொங்கிக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.சிறுவனின் கழுத்தில் கிடந்த கயிற்றின் மற்றொரு முனையில் மண்டை ஓடு கிடந்தது. மரத்தின் கீழே அழுகி, காய்ந்துபோன உடல் கிடந்தது. இதுகுறித்து உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார்அப்பகுதிக்கு வந்தனர்.

பின்னர் வியாழக்கிழமை காலை கடந்த 2 மாதங்களாகக் காணாமல் போனவர்கள் குறித்த பட்டியல்கள்தயாரிக்கப்பட்டது. மேலும் கண்டெடுக்கப்பட்ட பள்ளிச் சிறுவனின் சீருடையை வைத்து அவனது பள்ளிக்கூடம்கண்டுபிடிக்கப்பட்டது. அப்பள்ளியில் விசாரணை நடந்தது. விசாரணையில் அந்த மாணவனின் பெயர்மணிகண்டன் என்று தெரிய வந்தது.

மாணவர் மணிகண்டன் கடந்த அக்டோபர் 12 ம் தேதி முதல் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிய வந்தது.இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மாணவனின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவரின்வீட்டுக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்த விவரம்:

சென்னை முகப்பேறு 2 வது பிளாக் பகுதியில் குடியிருப்பவர் ராணி. இவரது கணவர் மகேந்திரன். இவர்களுக்குமகேந்திரன் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் இருந்தனர்.

இதற்கிடையே ராணிக்கும், அவரது கணவர் மகேந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தவிஷயம் போலீஸார் வரை போய்விட்டது. போலீஸார் அவர்களை அழைத்து சமாதானப்படுத்த முயன்ற போது,மகேந்திரன் கூறுகையில், எனது மனைவி ராணிக்கும், வேறு ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது.அதனால்தான் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது என்றார். இதையடுத்து ராணி தனது சொந்த ஊரானதிருவண்ணாமலைக்குச் சென்று விட்டார்.

சில மாதங்கள் கழித்து, ராணி தன் சகோதரர்களுடன் வந்து, மகேந்திரனிடம் சமாதானம் செய்ய முயன்றார்.பஞ்சாயத்தார் முன்னிலையில் இந்தப் பேச்சு நடந்தது. பின்னர் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். ஆனால்மீண்டும் அவர்களை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டியது. மனைவியையும் சமாளிக்க முடியாமல், உயிருடன்வாழ்வதும் அர்த்தமில்லாமல் போய் விடவே விரக்தியடைந்த மகேந்திரன், தன் மகனைக் கொன்று, தானும் மரத்தில்தூக்கில் தொங்கி விட்டார் என்று கண்டு பிடிக்கப்பட்டது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X