தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம் .. திருநாவுக்கரசு
சென்னை:
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (தமிழகத்தில்திமுக கூட்டணி) எம்.ஜி.ஆர். அ.தி.மு.க நீடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்கூறியதாவது:
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது. வரவிருக்கும்தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கும். நான் அ.தி.மு.க.வில் சேரப் போவதாக கூறுவதுவெறும் வதந்திதான். வதந்திகள் வருவது சகஜம். அதற்காக தீக்குளிக்க முடியாது.
சென்ற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு போதுமான அளவு இடம்ஒதுக்கப்படவில்லை. வரவிருக்கும் சட்டப்பேரவை தொகுதியில் எங்களுக்கு திருப்திஅளிக்கும் வகையில் கூட்டணித் தலைவர் இடம் ஒதுக்க வேண்டும்.
நாட்டில் நிறைய சாதிக்கட்சிகள் உருவாகி வருகின்றன. இது சமுதாய நலத்திற்குநல்லதல்ல. இந்த கட்சிகளை பெரிய கட்சிகள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, த.மா.கா. தலைவர்மூப்பனார் ஆகியோருக்கும் இது பொருந்தும்.
எங்கள் கட்சிக்கு 28 ஆயிரம் கிளைக் கழகங்கள் உள்ளன. மேலும் பல புதியஉறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அவர்கூறினார்.
எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க.வின் மாநில பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அதற்கு அவைத்தலைவர் முனுஆதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு பேசினார். கடசித் தலைவர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்திபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
சிறுபான்மை மக்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். பாபர் மசூதிபிரச்சனையில் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கும், கர்நாடக முதல்வருக்கும்பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்.ஜி.ஆர். சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவ அனுமதி தர சபாநாயகரையும்,மத்திய அரசையும் இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது. சிலை அமைக்கும்செலவை எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளும்.
சமையல் எரிவாயு, மண்ணெண்ணை, டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.
இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ரூ 200 கோடி செலவில் சுய வேலை வாய்ப்பு நிதிஉதவி கழகத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
முல்லை பெரியாறு அணைக்கட்டில் நீர்தேக்க அளவை 152 அடி அளவுக்குஉயர்த்துவது குறித்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் தரப்பட வேண்டும்உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications