வீரப்பன் புண்ணியவான் .. ராஜ்குமார் புகழாரம்
மைசூர்:
வீரப்பன் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார். அவர் ஒரு புண்ணியவான் என்று நடிகர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
வீரப்பன் பிடியிலிருந்து மீட்கப்பட்ட நடிகர் ராஜ்குமாருக்கு மைசூர் சாமுண்டி விகார் மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழா மைசூர்மகாராஜாவின் வாரிசான நரசிம்மராஜ உடையார் தலைமையில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு நடிகர் ராஜ்குமார் பேசியதாவது:
காட்டிலிருந்து எவ்வித பிரச்சனையுமின்றி வந்ததற்காக எனக்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். சாமுண்டி தாயின் ஆசிர்வாதத்தால் நான் மீண்டுவந்துள்ளேன்.
காட்டிலிருந்தபோது இருந்ததை விட இப்போது நன்றக இருக்கிறேன். கொஞ்சம், கொஞ்சமாகப் பழைய நிலைக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.
ரசிகர்களாகிய உங்களைக் கடவுளாகப் பாவிக்கிறேன். வீரப்பன் புண்ணியவான். எனக்கு வீரப்பன் கூட்டாளிகள் நல்ல உணவுகள் கொடுத்து உபசரித்தார்கள்.இருந்தாலும், காட்டுக்குள் இருக்கும்போது நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்கம முடியும்.?
காட்டில் இருந்த காலத்தை நினைத்தால் இப்போது கூட எனக்கு பயமாக இருக்கிறது. அங்கு இருந்த போது குரு ராகவேந்திரரையும், ரசிககடவுள்களையும் நினைத்துக் கொண்டிருந்தேன்.
நான் காட்டிலிருந்து எவ்விதப் பிரச்சனையுமின்றித் திரும்ப வேண்டும் என்பதற்காக இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் பாகுபாடின்றி பிரார்த்தனைசெய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நான் தனி மனிதன் அல்ல. உங்கள அனைவருக்கும் சொந்தமானவன்.
நான் மீட்கப்படுவதற்கு உதவி புரிந்த தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நக்கீரன் கோபால், பழ. நெடுமாறன், டாக்டர்பானு, கொளத்தூர் மணி, ப.சண்முகசுந்தரம் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் சக்தியாக வந்து என்னைக் காப்பாற்றியவர் டாக்டர் பானு. அவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் டாக்டர்ராஜ்குமார்.
பாராட்டு விழாவில், ராஜ்குமாருடன் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கோவிந்தராஜ், நாகேஷ், நாகப்பா ஆகியோருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நடிகர் ராஜ்குமாரைக் காண வந்தார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications