காரைக்காலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலவரம்
காரைக்கால்:
காரைக்காலில் புத்தாண்டுண்டு தின விழாவன்று ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீாசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பயம் காரணமாக அங்கிருந்து கலைந்து ஓடினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் பற்றிய விவரம்:
காரைக்காலை அடுத்து இருப்பது திருநள்ளாறு. திருநள்ளாறில் நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வரன் கோவில் இருக்கிறது. இதற்கு அருகே இருப்பதுசுரக்குடி கிராமம். இங்கு திங்கள் கிழமை புத்தாண்டு தினத்தன்று ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இன்னொரு கட்சியினர் வைத்திருந்த பெயர் பலகை மீது சுண்ணாம்பு நீரை கொட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருபிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அடையாளம் தெரியாத ஒரு கும்பல் திருநள்ளாறு கடைவீதியில் இருக்கும் கடைகள் மீது சோடா பாட்டில் தாக்குதல் நடத்தியது. சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பதில்தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் எதிர் கோஷ்டியினர் தப்பி ஓடி விட்டனர். கலவரம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலவரம் நடத்தியவர்களைகலைந்து போகுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் தொடர்ந்து கலவரம் நடந்ததால் போலீசார் வானம் நோக்கி சுட்டனர். பயந்து போன கலவரகும்பல் கலைந்து ஓடியது.
துப்பாக்கி சத்தம் கேட்டு சனீஸ்வரன் கோவிலில் இருந்த பக்தர்கள் பயந்து சிதறி ஓடினர். அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. அந்த பகுதியில்போலீஸ்காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications