குஜராத் நிலநடுக்கத்தில் 500 பேர் சாவு
சூரத்:
இந்தியாவின் 52 வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை குஜராத் மாநிலம் சூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 மாடிக்கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தவிர குஜராத் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஒரு பக்கம் இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்பட்டிருக்கும் வேளையில் யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென்றுஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரத் நகரிலுள்ள உமா பவன் அருகிலுள்ள கிருஷ்ணா காம்பிளக்சில் உள்ள 10 மாடிக்கட்டிடம் நிலநடுக்கத்தால் விழுந்து தரைமட்டமானது. இதில் 10 பேர்சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்றுதெரிய வந்துள்ளது.
கோல்பத் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். சூரத் மாவட்டத்தின் பல இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர்இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, ஹிமாச்சலப்பிரதேசம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனா மற்றும் ஏதென்ஸ்சில்ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 1999 ம் வருடம் மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 100 க்கும் மேற்பட்டோர்இறந்தனர். மகாராஷ்டிராவில் 1993 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் இறந்தனர். 30,000 வீடுகள் இடிந்து விழுந்தன.
யு.என்.ஐ.
- தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம்
- நிலநடுக்கம்... அவசரமாகக் கூடுகிறது அமைச்சரவை
- குஜராத்தில் அத்வானி
- நிலநடுக்கம் ஒரு கண்ணோட்டம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications