For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலநடுக்கம் ஒரு கண்ணோட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவில் பல மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.நிலநடுக்கத்தால் குஜராத் மாநிலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்கள் குறித்த விவரம்:

ஜூன் 16, 1819: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 12, 1897: மேகாலாயாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1,542 பேர் இறந்தனர்.

ஏப்ரல் 4, 1905: 20,000 பேர் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தனர்.

ஜனவரி 15, 1934: இந்தியா, நோபாள எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 10,000 பேர்உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 15, 1950: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 532 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 21, 1988: இந்திய, நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000 பேர் இறந்தனர்.

அக்டோபர் 20, 1991: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 768 பேர் இறந்தனர்.

செப்டம்பர் 30, 1993: மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 760 பேர் பலியானார்கள்.

மே 22, 1997: மத்திய பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் இறந்தனர்.

மார்ச் 29, 1999: உத்தரப்பிரதேசத்தில் நிலநடுக்கத்தில் 100 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டுஹிமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X