நிவாரண நிதி போட்டி கிடையாது ..ஆஸ்திரேலியா
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கான இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் பிரென்டன் மெக்கிளமெண்ட்ஸ் கூறியபோது, குஜராத் பூகம்பத்திற்கு வேறு வகையில் உதவுவதற்காககிரிக்கெட் வாரியத்துடன் ஆஸ்திரேலிய வீரர்கள் பேசி வருகின்றனர்,
பூகம்ப நிவாரணத்திற்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். குஜராத் பூகம்பத்தையடுத்து, பிப்ரவரி 17ம் தேதிபரோடாவில் தொடங்கவிருந்த இந்திய-ஆஸ்திரேலிய முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications