உலகக்கோப்பை கால்பந்து ... டிக்கெட் விற்பனை ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ:

விளையாட்டு உலகின் அடுத்த திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அடுத்த ஆண்டு கொரியாவும், ஜப்பானும் இணைந்து நடத்துகின்றன.

இதற்கான டிக்கெட் விற்பனை இம்முறை முழுவதும் இன்டெர்நெட் மூலம் நடைபெறும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்திருந்தது. ஆனால்லாஸ் ஏஞ்சல்ஸிலும், ஆம்ஸ்டர்டாமிலும் உள்ள இரண்டு கம்யூட்டர் செர்வர்கள் செயலிழந்ததால் போட்டியை நடத்தும் ஜப்பான் மற்றும் கொரிய ரசிகர்கள்பாவம் வழக்கமான படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டியுள்ளது.

டிக்கெட் பெற ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் அளிக்கப்படும். அதனை நிரப்பி கொடுத்தவுடன் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் குலுக்கலில்தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்கப்படும். இதனால், ஜப்பான் மற்றும் கொரிய ரசிகர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.

ஜப்பானில் மட்டும் 6,60,000 டிக்கெட்டுகளுக்கு 50 லட்சம் விண்ணப்பங்கள் வரை வரும் என போட்டி அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதனிடையே, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கொரிய, ஜப்பானிய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்போட்டியை நடத்தும் அமைப்பின் பொதுச்செயலாளர் யாஸூகோ என்டோ.

கம்ப்யூட்டர் தலைவலிக்கு முன்னர் மற்றொரு பிரச்சினை ஆரம்பமாகியது. அது இப்போட்டிக்கான அனைத்து விளையாட்டு தகவல் தொடர்பிலும்கொரியாவின் பெயரை ஜப்பானுக்கு முன் அச்சிட்டிருந்ததுதான். இதற்கு விளக்கமளித்த கொரிய அதிகாரி, ஜப்பான் இறுதிப் போட்டியை நடத்துவதால் அதற்குபரிகாரமாக கொரியாவின் பெயரை முதலில் அச்சிட சர்வதேச சம்மேளனம் ஒத்துக் கொண்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+