நீட்டிக்கப்படுமா காஷ்மீர் சண்டைநிறுத்தம்?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீர் சண்டை நிறுத்தத்தை மீண்டும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தை ஒட்டி அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தம் இரு முறை நீடிக்கப்பட்டு பிப்ரவரி 26ம் தேதி முடிவடைகிறது.

இந்த சண்டைநிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகள் மற்றும் மாற்றங்கள் ஆராயப்பட்டு வருகிறது. இது குறித்து விவாதிக்க மத்திய உள்துறையின்சிறப்பு செயலாளர் அசோக் பண்டாரி 2 நாள் விஜயமாக காஷ்மீர் வந்துள்ளார். பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இதுதொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உள்துறை அமைச்சகம் மீண்டும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்கள் சண்டை நிறுத்தத்தை விரும்புவதாக பிரதமரின் காஷ்மீர்விவகாரத்திற்கான ஆலோசர்களான வெளியுறவுத்துறை மந்திரி ஜஸ்வந்த் சிங், தேசிய பாதுகாப்புகுழு ஆலோசகர் பிரிஜேஸ் மிஸ்ரா, பிரதமர் அலுவலகத்தின்காஷ்மீர் விவகார சிறப்பு அதிகாரி துலே ஆகியோர் கருதுகின்றனர்.

இதற்கு காரணம், ஹூரியத் அமைப்பினர் இந்தியாவிற்கு எதிரான ஒரு நிலையை சண்டை நிறுத்தத்தின் போது எடுத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்.மக்களே ஹூரியத் அமைப்பின் நிலையை ஏற்காத போது சர்வதேச சமுதாயமும் இந்திய அரசை இந்த விஷயத்தில் நெருக்காமல் இருக்கும் என்றுகருதுகின்றனர்.

காஷ்மீர் அரசும், உள்துறையும் சண்டை நிறுத்த நீடிப்பை விரும்பவில்லை. சண்டை நிறுத்தத்தின் போது 248 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அரசுவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இக்கால கட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதலும் அதிகரித்துள்ளது. எதிர்பார்த்த பலனை அளிக்காதபோதுஇதனை நீட்டிப்பது தேவையற்றது என காஷ்மீர் முதல்வர் தெரிவிக்கிறார்.

தீவிரவாதிகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்து ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். அவர்கள் இதனை ஏற்க மறுத்து செய்யும் அட்டூழியங்களை தடுக்க கூடமுடியாமல பாதுகாப்பு படையினர் உள்ளனர். இதற்கு காரணம் சண்டை நிறுத்த நெறிமுறைகள் என்றார் பரூக்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+