கண் பார்வையோருக்கு உதவுகிறது கனடா அமைப்பு
டொரன்டோ:
கண் பார்வையின்மையை 2020-ம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக கனடியன் ஆபரேஷன் ஐ சைட் யுனிவர்சல் (ஓ.இ.யூ) என்றஅமைப்பு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இவர்கள் வளர்ந்து வரும் நாடான இந்தியா உள்பட உலகம் முழுவதும் கண்பார்வை இல்லாவதவர்களுக்கு கண் பார்வை வழங்க வேண்டும் என்பதற்காகஇந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓ.இ.யூ தற்போது இந்தியாவில் 28 திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவுக்கான கனடாவின் முன்னாள் தூதரான் ஸ்டீபன் லெவிஸ் இப்போது கண்பார்வை குழுவிற்கு தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது பற்றி அவர் கூறுகையில், நான் கனடா தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த பணியில் ஈடுபட விரும்புகிறேன். ஏனென்றால் அவர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் இந்த பணியில் பல காலமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
யுனிசெப் உடல் ஊனமுற்றோர் வைட்டமின் ஏ குறைபாடு கொண்டோர் மற்றும் பார்வையற்றோருக்கு உதவி வருகின்றனர். ஓ.இ.யூ-க்கு முக்கியதேவையான நிதியுதவியை கடந்த 27 வருடங்களாக கனடாவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் தான் வழங்கி வருகிறது.
ஓ.இ.யூ. 37 வரூடமாக செயல் பட்டு வருகிறது 1999-ம் ஆண்டு 1.73 மில்லியன் மக்களை பரிசோதித்தோம். இதில் 970,096 பேர் இந்தியாவைச்சேர்ந்தவர்கள். எங்கள் நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து 71,198 பேருக்கு சிகிச்சை அளித்தோம்.
இதில் 42,987 பேருக்கு பார்வை மீண்டும் பெறுவதற்கான அறுவை சிகிச்சை செய்தோம். 9,116 பேருக்கு பார்வை போகாமல் இருப்பதற்கானமுன்னெச்சரிக்கை அறுவை சிகிச்சை செய்தோம்.
இப்போது இந்தியாவில் மும்பையில் அமைந்திருக்கும் குழந்தைகளுக்கான கண் சிகிச்சை செய்யும் அறக்கட்டளை, தமிழகத்தில் உதக மண்டலத்திலிருந்து 13கிலோமீட்டர் தொலைவில் குன்னூரில் அந்ைதிருக்கும் கண்பார்வை இழந்தோருக்கு உதவும் சங்கம் உத்திரபிரதேசம் அலிகாரில் இருக்கும் காந்தி கண்மருத்துவமனை ஒத்துழைப்புடன் பல பணிகளை ஓ.இ.யூ செயல்படுத்தி வருகிறது.
இது தவிர டெல்லி இருக்கும் உதவி சங்கம், சிலிகுரியிலிருக்கும் லயனஸ் கண் மருத்துமனை, பிகார் பங்காவில் இருக்கும் காமேஷ்வரி ப்ரியா ஏழைகள் கண்மருத்துவ மனை ஒத்துழைப்புடன் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
வங்க தேசம், நேபால், இலங்கை, பாகிஸ்தான், கென்யா, ஜாம்பியா, பெரு போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கும் சென்று ஓஇயூ சிதிச்சை அளித்துள்ளது எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications