கள்ளச்சாராயத்தை சவாலாக ஏற்று ஒழியுங்கள்: முதல்வர் பேச்சு
கோவை:
கள்ளச்சாரயத்தை முழுமையாக ஒழிக்க, அதனை சவாலாக ஏற்று காவல்துறைசெயல்பட வேண்டும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தைத் திறந்து வைத்து தமிழக முதல்வர்கருணாநிதி பேசியதாவது:
நமது நாடு அந்நியரின் ஆதிக்கத்தில் இருந்தபோது போலீஸ்காரர்கள், சுதந்திரத்திற்குஎதிரானவர்கள் என்ற கருத்து இருந்தது. இந்த கருத்து இன்னமும் முழுமையாகமாறவில்லை.
காவல்துறையினர் நல்லமுறையில் பணியாற்றி வந்தாலும் கூட, சிலர் குறை கூறிவருகின்றனர். இதுவே நாட்டின் "மேனியாவாக மாறி விட்டது.
அரசியல் கட்சியினர் கவால்துறையினரை வெறுப்போடு பார்த்து வருகின்றனர். இதுகாலங்காலமாக இருந்து வரும் வெறுப்பா, இல்லை, தவறு செய்பவர்களைஉனடனடியாக நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கிறார்களே என்ற வெறுப்பா எனத்தெரியவில்லை.
யாரோ ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த காவல்துறையையும்
பா திக்கக் கூடாது. காவல்துறையில் 10 பேர், நூறு பேர் தவறு செய்யலாம். இவர்கள்செய்யும் தவறு, ஒட்டுமொத்தமாக துறையையே மோசமானதாக காட்டிவிடக்கூடாது.இது காவல் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் உள்ளது.
அரசியல்வாதி என்றலே இன்று வேண்டாத, தொடத்தகாத அசிங்கமான சொல் என்றாகிவிட்டது. ஒரு சில அரசியல்வாதிகள் ஊழல் செய்வதால், எல்லா அரசியல்வாதிகளுமேஊழல் செய்பவர்கள் என்று இலக்கணம் வகுக்கக் கூடாது.
தமிழக காவல்துறையைப் பற்றி கடந்த 96ம் ஆண்டு நான் பேசும்போது, ஈரல் கெட்டுவிட்டது, உடலைக் காப்பாற்ற முடியாது எனக் கூறினேன். அப்போது 99 சதவீதம்கெட்டிருந்தது. அதில் மிஞ்சிய ஒரு சதவீதத்தை வைத்து இப்போது நூறு சதவீதம்குணமடையச் செய்துள்ளேன். இதற்கு ஒத்துழைப்பு அளித்த காவல்துறையினருக்குநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இன்னும் கள்ளச்சாரயம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இதனைத்தடுத்து நிறுத்த காவல்துறையினர் சவாலாக ஏற்றுச் செயல்பட வேண்டும்.
காவல்துறைக்காக அதிகமாக வாதடியவன் நான் தான். தண்டிக்கப்பட்டவனும் நான்தான். காவலர்களின் பிரச்னையைத் தீர்க்க இரண்டு முறை கமிஷன் அமைத்துஅவர்களது பிரச்னையைக் கேட்டறிந்துள்ளேன். இன்னும் நாட்டில் திருட்டு, கொலை,கொள்ளைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனசாட்சிப் படி அவரவர் நடந்துகொண்டால் மட்டுமே இப் பிரச்னைக்குத் தீர்வு கணமுடியும் என முதல்வர் பேசினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications