அதிமுக வென்றாலும் ஜெ. முதல்வரில்லை: சுவாமி
மதுரை:
காங்கிரஸ் கட்சியிலும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் உள்ளதாக ஜனதாக் கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டினார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய சுவாமி, காங்கிரஸ் கட்சியிலும் புலிகள் ஆதரவாளர்கள் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை சேர்த்தது பற்றிகாங்கிரஸ் விளக்கம் கேட்பது சரியல்ல.
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் புலிகளுடன் வர்த்தக உறவு வைத்துள்ளார். ராஜீவ் காந்தியை கொன்றதற்காகதூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு கருணைமனு அனுப்புகிறார் சோனியா. அதே வழக்கில் கண்டிக்கப்பட்ட திராவிடர் கழகத்துடன் கூட்டணிவைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
வீரப்பன் கடத்திய கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க கர்நாடக காங்கிரஸ் அரசை 20 கோடி ரூபாய் அளிக்க உத்தரவிட்டது சோனியா காந்தி. அதில் 10கோடி ரூபாய் விடுதலைப் புலிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்தளவிற்கு புலிகளுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் கட்சி முதலில் இவற்றிற்கு விளக்கம் அளிக்கவேண்டும்.
வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அணி தமிழகத்தில் வெற்றி பெற்றாலும் இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாமுதல்வராக முடியாது என தெரிவித்தார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
