புகை பிடிக்காதீர் ... அபராதம் கட்டாதீர் ...
பனாஜி:
இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் கோவாவில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ5000 அபராதம் விதிக்க கோவா அரசு திட்டமிட்டுள்ளது.
கோவாவில் சுற்றுப்புறச் சூழலை மிகவும் நன்றாக வைத்துக் கொள்ளும் விதத்திலும் பசுமை எழில் கொஞ்சம்மாநிலமாக மாற்றும் விதத்திலும் புகை பிடிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது கோவா அரசு.
அதாவது, 1997 ம் ஆண்டு தொடங்கப்பட்ட புகைபிடிப்பதற்கான தடைச் சட்டத்தையும், 1996 ம் ஆண்டு உருவானமாசுக்களை கட்டுப்படுத்தும் சட்டத்தையும் பின்பற்ற கோவா அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளர் அசோக் நாத் இந்தத் திட்டங்களை பின்பற்றுவது குறித்து பலருடன்ஆலோசித்தார். பின்னர் அவர் கூறுகையில், ஏற்கனவே, கோவாவில் பொது இடங்களில் புகை பிடிப்போரிடம்அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, பொது இடங்களில் புகை பிடிப்போரிடம் ரூ 5, 000 வசூல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் மாநிலத்தின் முக்கியப் பொது சாலைகளிலும், புகை பிடிக்காதீர் என்ற அறிவிப்புப் பலகைகள்வைக்கப்படும். ஆங்காங்கே சுவரொட்டிகளும் ஒட்டப்படும்.
கல்வி நிலையங்கள் மூலம், புகையிலை உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது பள்ளி குழந்தைகளுக்குஎடுத்துரைக்கப்படும். பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு கோவாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தும் அது எதிர்பார்த்தவெற்றியைத் தர வில்லை. அதனால் மீண்டும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சிப்போம்என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications