For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிச்சாங்கப்பா அந்தர் பல்டி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சூடு பிடித்து விட்டது. தேர்தலுக்கே உரிய கூட்டணிகுழப்பங்களும் அரங்கேறி நடந்து கொண்டிருக்கின்றன. கட்சிகள் ஒருகூட்டணியிலிருந்து மற்றொரு கூட்டணிக்கும் ஓடும் விஷயங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போலிருக்கிறது ஜெயலலிதாவில் பல்டி. பாட்டாளிமக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா பா.ம.க.வுக்கு தமிழகத்தில் 27 தொகுதிகள்ஒதுக்கினார். மேலும் பா.ம.க. நிறுவனத்தலைவர் ராமதாசின் கனவான பாண்டிச்சேரிஆட்சிக்கும் ஒப்புதல் அளித்தார்.

ஆனாலும் பாண்டிச்சேரியில் ஆட்சி சுழற்சி முறையில் இருக்கும். 5 ஆண்டு ஆட்சியில்முதல் இரண்டரை ஆண்டு பா.ம.க. ஆட்சி செய்யும். அடுத்த இரண்டரை ஆண்டுகள்அ.தி.மு.க. ஆட்சி நடத்துவது என்ற ஒப்பந்தமும் ஏற்பட்டது.

தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை முடித்த பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,இனி த.மா.கா.,காங்கிரசுடன் அதிமுகவுக்குக் கூட்டணி கிடையாது என கூறினார்.

இந்த செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் நோக்கர்கள்இது அ.தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தனர்.

ஆனால் செவ்வாய்க்கிழமை திடீரென ஜெயலலிதா ஒரு சூப்பர் பல்டி அடித்தார். நான்கூட்டணி முறிவு என்று கூறவே இல்லை. இது பத்திரிக்கைகளால் திரிக்கப்பட்ட தகவல்என்றார்.

த.மா.காவுக்கும், காங்கிரசுக்கும் 45 தொகுதிகள் தர தயாராக இருக்கிறேன்.அவர்கள்பிரித்து எடுத்துக் கொள்ளலாம் என தாராளமாக அறிவித்தார்.

பாண்டிச்சேரியிலும் சுழற்சி ஆட்சி முறையில் அ.தி.மு.க.வுக்கு பதிலாக காங்கிரஸ்விரும்பினால் ஆட்சி அமைக்கலாம் எனவும் கூறினார்.

ஜெயலலிதாவின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? அரசியல் ஆலோசகர்களின்ஆலோசனையும், தி.மு.க. மீண்டும் த.மா,கா.வை அழைத்ததும் தான் காரணம்.

ஜெயலலிதா த.மா.கா. உறவை முறித்துக் கொண்டதாக தகவல் வந்ததும், தி.மு.க.தலைவர் கருணாநிதி பாசத்துடன் மூப்பனாரை அழைத்தார். முன்னதாகத.மா.கா.வுடனான உறவுக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டது என கூறிய அவரும்அடித்தார் ஒரு பல்டி.

நான் அப்படி கூறவேயில்லை. த.மா.கா. தான் கதவுகளை மூடிவிட்டது என கூறினேன்என கூறி இரு கரம் நீட்டி தன் பழைய நண்பரை பாசத்துடன் அழைத்தார்.

இது ஜெயலலிதாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதே சமயத்தில் பா.ம.க.வை தனதுஒரே எதிரியாக கருதிவரும் விடுதலை சிறுத்தைகளும் தி.மு.க. பக்கம் பாய்ந்து சென்றுவிட்டனர்.

மூப்பனார் முடிவெடுப்பார், எடுப்பார் என காத்திருந்தனர் விடுதலைச் சிறுத்தைகள்.ஆனால் மூப்பனாரோ மெளனத்தின் மொத்த உருவமாக இருந்தார். அவரதுமெளனத்திற்கு அர்த்தம் புரியாமல் வெறுத்துப்போன விடுதலை சிறுத்தைகள்தி.மு.க.வில் இணைந்தது.

அங்கிருந்து கொண்டு மூப்பனாரை தி.மு.க.வுக்கு வருமாறு விடுதலை சிறுத்தைகளின்தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

அரசியல் நோக்கர்களும், அரசியல் ஆலோசகர்களும் த.மா.கா,அ.தி.மு.க.வில்இணையாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஜெயலலிதாவிடமஎடுத்துரைத்தார்கள்.

புருவத்தை சுருக்கி யோசித்தார் ஜெ. செவ்வாய்க்கிழமை பல்டி அடித்து, வாருங்கள்மூப்பனாரே உங்களுக்கும், காங்கிரசுமாக சேர்த்து 45 தொகுதிகள் தருகிறேன். நீங்கள்பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பாண்டிச்சேரி சுழற்சி ஆட்சி முறையில் காங்கிரஸ்பங்கேற்கலாம் என அறிவித்தார்.

ஜெயலலிதாவின் பல்டி தி.மு.க.வுக்கு ஒரு அடி என்றே கூறலாம். மதவாத கட்சியானபா.ஜ.க.வுடன் இணைந்ததால் தி.மு.க.வுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டதாகக்கூறினார் மூப்பனார். இன்னும் பா.ஜ.க. அந்த கூட்டணியில் இருக்கும் போது அந்தகூட்டணிக்கு மூப்பனார் செல்வாரா என்பது சந்தேகம் தான்.

சாதிக் கட்சிகள் துவக்கியுள்ள மூன்றாவது அணிக்கு சென்றால் டெபாசிட் கிடைப்பதேகஷ்டம் என்ற பயமும் மூப்பனாருக்கு இருக்கிறது. அதனால் ஜெ.யின் அழைப்பைஏற்று அவர் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைவார் என்ற எதிர்பார்புஅதிகரித்து வருகிறது

ஆரம்பம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி,அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததற்குகாங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கூட்டணி கட்சிகளை கேட்காமல் எவ்வாறுஜெயலலிதா தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்.

விடுதல்ைபுலி ஆதரவாள கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க.கூட்டணியில் இணைத்து கொண்டதற்கு ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும் எனதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால்அதற்கு ஜெயலலிதாவிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.

ஜெயலலிதாவின் சுழற்சி ஆட்சி முறையை ஏற்க காங்கிரஸ் மறுத்து வருகிறது.காங்கிரஸ் பாண்டிச்சேரி ஆட்சி எங்களுக்கு மட்டுமே. அதில் எந்த விதமான மறுயோசனையும் கிடையாது என கூறி வருகிறது.

மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கூறி வந்தாலும், மூப்பனார்அந்த பலப்பரீட்சைக்கு தயாராக இருப்பார் என தோன்றவில்லை என பலரும்கூறுகின்றனர்.

த.மா.கா.விலும். தி.மு.க.வா?அல்லது அ.தி.மு.க.வா? என்ற கருத்துதான் நிலவுகிறது.மூன்றாவது அணி குறித்து பேச யாரும் விருப்பம் காட்டவில்லை.

ஜெயலலிதாவின் 45 தொகுதிகளை ஏற்றுக் கொண்டு காங்கிரசுடன் மூப்பனார்அ.தி.மு.க.வுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூப்பனார் தனது மெளனத்தைக் கலைத்துக் கொண்டு. கூட்டணி குறித்த இறுதி முடிவைபுதன்கிழமை அறிவிப்பார் என்ற பலத்த எதிப்பார்ப்பு நிலவுகிறது.

மூப்பனாரின் மெளனம் கலைந்தவுடன் தமிழக தேர்தல் கூட்டணி முற்று பெற்றுவிடும்.அதன் பின் ஆரம்பிக்கும். கட்சிகளின் பிரச்சார தாக்குதல் போர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X