For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூப்பனாரிடம் மன்றாடும் காங்கிரஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரசை உதறி விட்டு அதிமுக கூட்டணியில் சேர வேண்டாம். மாறாக 3-வது அணி அமையுங்கள் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானோர் அக்கட்சித் தலைவர் மூப்பனாருக்குக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் இருக்கிறது. இந்தத் தேர்தலுக்குப் பின் அந்தக்கட்சிஇருக்குமா, இல்யாை என்ற அளவுக்கு நி லைமை கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் த.மா.கா. நீடிக்கும் என்ற சூழ்நிலை கடந்த மாதம் வரைஉறுதியாக இருந்தது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி அதிக கூடாரத்தில் நுழைந்தவுடனேயே அது தளரத்தொடங்கி விட்டது. பா.ம.க இருக்கும் கூட்டணியில், நாங்கள் இடம் பெற மாட்டோம் என காங்கிரஸ் கட்சிதிட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுங்கள் எனக் கூறி விட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஹைதராபாத் சென்று விட்டார்.

அவரது கெடு முடிந்து, அவரும் திரும்பி பா.ம.க.வுடன் தொகுதி உடன்பாட்டையும் முடித்து விட்டார். இருப்பினும்இன்னும் த.மா.கா.வின் முடிவு என்ன என்பது தெரியவில் லை. மூப்பனாரின் மெளனம் வரலாறு காணாதஅளவுக்கு இருக்கிறது.

தற்போது 45 இடங்கள் தருவதாகவும், பாண்டிச்சேரிமுதல்வர் பதவியில் தங்களின் பங்கைக் கொடுக்கவும் தயார்எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் இதற்கும் த.மா.கா. தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. இந்தநிலையில், மூன்றாவது அணி அமைக்கும் கோரிக்கை த.மா.கா. வட்டாரத்தில் வலுத்து வருகிறது.

அதற்கு அவர்கள் சில காரணங்களையும் கூறுகிறார்.

1. இனி மேல் போய் திமுகவுடன் சேருவது நன்றாக இருக்காது. அப்படிச் சேர்ந்தாலும் அவர்கள் கொடுக்கும்இடங்களைத்தான் பெற்றுக் கொள்ள முடியும். அதிகம் டிமான்ட் செய்ய முடியாது. மேலும், எல்லோராலும்நிராகரிக்கப்பட்டகட்சி என்ற பெயரும் கிடைக்கும்.

2. காங்கிரஸைப் புறக்கணித்து விட்டு நாம் மட்டும் போய் அதிமுக கொடுக்கும் இடங்களைப் பெற்றுக் கொண்டுகூட்டணியில் நீடிப்பது சரியாக இருக்காது. காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதைஎதிர்த்து தனிக் கட்சி கண்டு பெரும் வெற்றி யையும் பெற்றவர்கள் நாங்கள். இந்த நிலையில், சீட்டுகளுக்காக,காங்கிரஸ் கட்சியை உதறி விட்டு, அதிமுகவுடன் சேர்ந்தால் மக்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்.

3. 3-வது அணி அமைப்பதே இப்போதைக்கு நல்ல வாய்ப்பு. மக்கள் தமிழ் தேசம், புதிய நீதிக் கட்சி போன்றகட்சிகள் ஜாதிப் பலங்களுடன் உள்ளன. மேலும் தலித் கட்சியான விடுதலைச் சிறுத்தைக் கட்சியையும் உடன்சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் சேர்ந்தால் நிச்சயம், திமுக, அதிமுக கூட்டணிக்கு பயத்தை உருவாக்க முடியும்.நமக்கும் புதிய கூட்டணியின் தலைமைக் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கும் என்பதே த.மா.கா. தலைவர்கள்வைக்கும் வாதங்கள்.

புதன்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஏற்கனவேஅறிவித்துள்ளர். அனேகமாக மூப்பனாரும் தனது மெளனத்தை புதன்கிழமை கலைப்பார் என்றும் தெரிகிறது.3-வது அணி வருமா, அல்லது அதிமுகவுடன் சமரசம் செய்து கொள்ளப்படுமா அல்லது வேறு என்னதான் நடக்கப்போகிறது என்பது புதன்கிழமை மூப்பனாரின் முடிவைப் பொறுத்துத் தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X