குடிநீரில் பாதரசம் கலக்கும் நிறுவனம் மூடல்
கொடைக்கானல்:
இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்கு சொந்தமான தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள இத்தொழிற்சாலையில், தெர்மாமீட்டர் தயாரிப்பின் போது உடையும் கண்ணாடிகளை வெளியே கொட்டி விடுகின்றனர்.
இந்த கண்ணாடிகளில் மெர்க்குரி(பாதரஸம்) கலந்து இருப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இக்குற்றச்சாட்டை கூறியுள்ள பழனி மலை பாதுகாப்புக்குழு எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம், சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கும்நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.
இந்த அமைப்பு தான் தமிழக அரசியலை கலக்கிய கொடைக்கானல் பிளசண்ட ஸ்டே ஹோட்டல் வழக்கிற்கு காரணமாகும். விதிமுறைகளை மீறி,ஹோட்டலில் அதிக தளங்கள் கட்டப்பட்டிருப்பதால் பாதிப்பு ஏற்படும் என கூறி தாக்கல் செய்த வழக்கில் சாதகமான தீர்ப்பையும் பெற்றது.
கொடைக்கானலின் மூஞ்சிக்கல் பகுதியில் அமைந்துள்ள தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் பாதரஸக் கழிவுகள்மழைநீரால் அடித்து செல்லப்பட்டு நீரோட்டத்தில் கலந்து விடுகிறது.
இந்த நீரோட்டம் வைகை நதியில் கலப்பதால், மதுரை உள்ளிட்ட பல தென்கிழக்கு மாவட்டங்களில் குடிநீர் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியது.
இந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பாதரஸத்தால் கிட்னி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகஇந்நிறுவன பணியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்நிறுவனத்தின் கழிவு கண்ணாடிகளை தமிழகத்தில் பல வளையல் உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிறுவனம், தொழிற்சாலையின் செயல்பாடு பற்றி ஆராய்ந்த பின், கழிவுகள் வெளியேறுவது பற்றிதெரிய வந்தால் அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications