தேர்தலில் ஜெ. போட்டியிட முடியாதே...வைகோ ஜோசியம்
பாண்டிச்சேரி:
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவால் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது என மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பாண்டிச்சேரியில் சனிக்கிழமை நடக்கவுள்ள மதிமுக பேரணியில் பங்கேற்க வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,
பல கோடி மதிப்புள்ள டான்சி நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துவிட்டது.இதனால், அவர் தேர்தலிலேயே போட்டியிட முடியாது. அந்த நிலையில் அவரை முதல்வராக அறிவித்து அதிமுக கூட்டணிஎப்படி போட்டியிடப் போகிறது.
ஒரு பககம் ஜெயலலிதாவின் மனுவை ஏற்பதும் நிராகரிப்பதும் தேர்தல் அதிகாரியின் முடிவைப் பொறுத்தது என அதிமுககூறுகிறது. ஆனால், அவரது முடிவே இறுதியானது அல்ல எனவும் இன்னொரு பக்கம் அந்தக் கட்சி கூறுகிறது.
தமிழகத்தில் மட்டும் த.மா.காவுடன் கூட்டணி வைபபார்களாம். பாண்டிச்சேரியில் அதிமுகவும் த.மா.காவும் தனித்தனியேபோட்டியிடுவார்களாம். இது முழுக்க முழுக்க மோசடியான செயல். இது மக்களை குழப்பும் செயல். தமிழகத்தில் ஆதரிக்கும் ஒருகட்சியை பாண்டிச்சேரியில் என்ன சொல்லி எதிர்க்கப் போகிறார்கள். இது ஓட்டு போட வரும் மக்களையே கேவலப்படுத்தும்செயலாகும்.
தமிழ் ஈழம் விஷயத்தில் மதிமுகவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அதில் நாங்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.இந்த விஷயத்தைப் பயன்படுத்தி எந்தக் கட்சியும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நாங்கள் எங்களுக்கு எத்தனை இடங்கள் வேண்டும் என்பதை கூறியிருக்கிறோம். பாரதீயஜனதாவுககு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கும் கூடுதல் இடம் வேண்டும் என்று திமுகவிடம் கேட்க மாட்டோம்.கூட்டணியில் முக்கியமான கட்சி மதிமுகவா, பா.ஜ.வா என்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
எங்களுக்குள் நல்ல ஒற்றுமை உள்ளது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டுமோ அதைத் தான் கேட்போம்.
தேர்தலுக்கு முன்னதாகவே அனைத்து வக்காளர்களுக்கும் அடையாள அட்டைகளை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும்.மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications