For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 20 வேட்பாளர்களின் பட்டியலை பாரதீய ஜனதா கட்சிஅறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள இந்தக் கட்சி 21 இடங்களில் போட்டியிடவுள்ளது. வேட்பாளர்களின் பட்டியல்செவ்வாய்க்கிழமை டெல்லியில் வெளியிடப்பட்டது.

பட்டியல் விவரம்:

1. மானாமதுரை தொகுதி (ரிசர்வ்ட்- எஸ்.சி.)- டாக்டர். கிருபாநிதி (பா.ஜ.க. மாநிலத் தலைவர்)

2. காரைக்குடி- எச். ராஜா (கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்)

3. கிள்ளியூர்- சாந்தகுமார் (பா.ஜ.க. தேசியக் கவுன்சில் உறுப்பினர்)

4. பத்மநாபபுரம்- சி. வேலாயுதம் (இப்போதும் இவர் எம்.எல்.ஏ.)

5. ஒசூர்- பி. வெங்கிடசாமி (இப்போதும் இவர் எம்.எல்.ஏ.)

6. திருவெட்டாறு- பி. ராஜாமணி

7. சாத்தான்குளம்- ஏ.என். ராஜகண்ணன்

8. சேரன்மாதேவி- எஸ்.எஸ்.என். சொக்கலிங்கம்

9. ஸ்ரீவில்லிப்புத்தூர்- எஸ். மோகன்ராஜூலு

10. கம்பம்- என்.கே.ஆர். கிருஷ்ணகுமார்

11. ஸ்ரீரங்கம்- எம். செளந்தரபாண்டியன்

12. மன்னார்குடி- எஸ். குணசேகரன்

13. மயிலாடுதுறை- ஜெகவீரபாண்டியன்

14. பள்ளிப்பட்டு- எம். சக்கரவர்த்தி

15. பேரணாம்பட்டு (ரிசர்வ்ட் தொகுதி)- தொன்றல்நாயகம்

16. தளி- கே.வி. முரளீதரன்

17. கோவை கிழக்கு- என்.ஆர். நஞ்சப்பன்

18. உதகமண்டலம்- எச். உச்சி கவுடர்

19. ஏற்காடு- கே. கோவிந்தன்

20. திருப்பூர்- லலிதா குமாரமங்கலம்

திருச்சி எம்.பியான மறைந்த மத்திய அமைச்சரின் தங்கையான லலிதா குமாரமங்கலத்துக்கு திருச்சியில்மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அங்கு போட்டியிடஆர்வமாக இருந்து வந்தார். ஆனால், பா.ஜ.க. தலைமை அவருக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை. திருப்பூர்சட்டமன்றத் தொகுதியைத் தான் அவருக்கு ஒதுக்கியுள்ளது.

அதே போல மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரையும் பா.ஜ.க. அறிவிக்கவில்லை. இந்தத்தொகுதியில் பா.ஜ.கவிலிருந்து அதிமுகவிற்குத் தாவிய டாக்டர். மைத்ரேயன் ஜெயயலிதாவின் வேட்பாளராகப்போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதனால் அங்கு பலமிக்க யாரையாவது நிறுத்த பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X