ஏப்.16 ல் அரவக்குறிச்சியில் மதிமுக தேர்தல் பிரசாரம் தொடக்கம்
கரூர்:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரம் அரவக்குறிச்சியில் ஏப்ரல் 16ம் தேதிதொடங்குகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில்,மதிமுக வின் தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறது. கோவையில் சனிக்கிழமை நடக்கும் மதிமுக மாநாட்டிற்கு பிறகுஇந்த பிரச்சாரப் பயணம் தொடங்கவுள்ளது. இந்தப் பிரச்சாார இயக்கத்தை மதிமுக பொதுச் செயலர் வைகோதுவக்குகிறார்.
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்த பிறகு, கோவையில் அரசியல் கட்சி மாநாட்டை மதிமுகநடத்துகிறது.
இதையடுத்து கரூரில் உள்ள அரவக்குறிச்சியில் ஏப்ரல் 16ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது. இங்குபிரச்சாரப் பயணத்தை தொடங்கும் வைகோவிற்கு வானவேடிக்கை, மேளதாளத்துடன் வரவேற்புக் கொடுக்கமதிமுகவினர் முடிவு செய்து தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தென்னிலை, பரமத்தி, சின்னதாராபுரம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் பிரச்சாரம்இடம் பெறும். கரூரில் மாலையில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!