14 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி: திருச்சி 1 ல் முஸ்லீம் லீக்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் 3 தொகுதிகளை அக்கட்சி முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கியுள்ளது
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக முன்னேற்றக் கழகம், பார்வர்டுபிளாக் மற்றும் இந்திய தேசிய லீக் காட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தமாகாவும், காங்கிரசும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 தொகுதிகளை அறிவிப்பதில்காலதாமதம் காட்டி வந்தன.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம்ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி, தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டது.
இதில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் ஒரு தொகுதி இந்திய முஸ்லீம் லீக்கிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன
1. திருவல்லிக்கேணி
2. சேப்பாக்கம்
3. ஓசூர்
4. ஊட்டி
5. அறந்தாங்கி
6. கரூர்
7. ஸ்ரீபெரும்புதூர்
8. தஞ்சை
9. செங்கம் (தனி)
10. நாமக்கல்
11. கோவை மேற்கு
12. திருச்சி 2
13. சாத்தூர்
14. காட்டுமன்னார் கோவில்
திருச்சி 1 தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!